ரூ.19 கோடியில் 87 புதிய ஆம்புலன்ஸ்கள்: முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு சார்​பில் ரூ.19 கோடி​யில் 87 புதிய ‘108’ ஆம்​புலன்​ஸ்​களை முதல்​வர் ஸ்டா​லின் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். வீட்​டு​வசதி துறை​யில் டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு பணி நியமன ஆணை​களை​யும் வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ‘108 அவசர​கால ஆம்​புலன்​ஸ்’ சேவையை கடந்த 2008 செப்​.15-ம் தேதி அப்​போதைய முதல்​வர் கருணாநிதி தொடங்கி வைத்​தார். EMRI GHS என்ற தனி​யார்நிறு​வனத்​துடன் ஏற்​படுத்​தப்​பட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் அடிப்​படை​யில் 108 ஆம்​புலன்ஸ் சேவை வழங்​கப்​பட்டு வரு​கிறது. தற்​போது 1,353 அவசர​கால ஆம்​புலன்​ஸ்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த அரசு பொறுப்​பேற்​ற​தில் இருந்து இது​வரை இந்த சேவை மூலம் கர்ப்​பிணி​கள், சாலை விபத்​துகளில் காயமடைந்​தவர்​கள், இதர அவசர​கால மருத்​துவ தேவை​கள் என 85.98 லட்​சம் பேர் பயனடைந்​துள்​ளனர்.

இந்த சேவையை மேம்​படுத்​தும் வகை​யில், தமிழக அரசு சார்​பில் ரூ.18.90 கோடி​யில் 87 புதிய ‘108’ ஆம்​புலன்​ஸ்களை சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் ஸ்டா​லின்நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

பணிநியமன ஆணை: வீட்​டு​வச​தி, நகர்ப்​புற வளர்ச்​சித் துறை​யின்​கீழ் இயங்​கும் தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரி​யத்​தில் தொழில்​நுட்ப உதவி​யாளர் (சி​வில்) பணி​யிடங்​களுக்கு 36 பேர், நகர் ஊரமைப்பு இயக்​ககத்​தில் அளவர், உதவி வரை​வாளர் பணி​யிடங்​களுக்கு 24 பேர்தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்
​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) வாயி​லாக தேர்வு செய்​யப்​பட்​டனர். அவர்​களுக்கு பணி நியமனம்வழங்​கும் அடை​யாள​மாக பணிநியமன ஆணை​களை​யும் முதல்​வர் வழங்​கி​னார். சிறு​பான்​மை​யினர் நலத் துறை சார்​பில் விருதுநகர், தேனி,திரு​வள்​ளூர், பெரம்​பலூர், சிவகங்கை மாவட்​டங்​களில் முஸ்​லிம்​களுக்​கான அரசு பொதுகபர்​ஸ்​தான்​களும் (நல்​லடக்​கத்தலம்), மேற்​கண்ட மாவட்​டங்​கள் மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் கிறிஸ்​தவர்​களுக்​கான அரசு பொதுக் கல்​லறைத் தோட்​டங்​களும் அமைக்க நிலம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, சுற்​றுச்​சுவர், பெயர்ப் பலகை உள்ளிட்டஅடிப்​படை வசதி​கள் அமைத்துபராமரிக்க உள்​ளாட்சி அமைப்​பு​களிடம் வழங்​கும் வித​மாக அதற்​கான ஆணை​யை​யும் அலு​வலர்​களிடம் முதல்​வர் வழங்​கி​னார்.

இந்த நிகழ்​வில் அமைச்​சர்​கள் முத்​து​சாமி, மா.சுப்​பிரமணி​யன்,சா.​மு.​நாசர், தலை​மைச் செயலர் முரு​கானந்​தம், வீட்​டு​வச​தித் துறை செயலர் காகர்லா உஷா, சுகா​தா​ரத் துறைச் செயலர் செந்தில்​கு​மார், தேசிய நல் வாழ்வுக் குழும இயக்​குநர் அருண் தம்​பு​ராஜ், பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர், சிறு​பான்​மை​யினர் நலத் துறை செயலர் லட்​சுமி பிரி​யா, ​துறை ஆணை​யர் ஆசியா மரி​யம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.