'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' – உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார்

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் அவரது வீராங்கனைகள் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

Team India
Team India

அமோல் மஜூம்தார் பேசியதாவது, ‘இந்த அணியை நினைத்து அவ்வளவு பெருமையாக இருக்கிறது. இது ஒரு அசாத்தியமான சாதனை. இந்த வெற்றிக்காக இந்த வீராங்கனைகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வெற்றி. இடையில் எங்களுக்கு ஏற்பட்ட சறுக்கல்களை தோல்விகளாக பார்க்கவில்லை.

ஏனெனில் அந்த போட்டிகளில் கூட நாங்கள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தியிருந்தோம். அதனால் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு மகுடம். ஷெபாலியின் செயல்பாட்டை ஒரே வார்த்தையில் மேஜிக்கல் எனக் கூறுவேன். அரையிறுதியில்தான் அணிக்குள் வந்தார். ரன்கள் அடித்து விக்கெட்டும் எடுத்து கொடுத்தார், அசத்திவிட்டார்.

Team India
Team India

கடந்த சில காலமாக வீராங்கனைகளின் பிட்னஸிலும் பீல்டிங் திறனிலுமே அதிக கவனம் செலுத்தினோம். ‘ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.