திருமலை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு எல்விஎம்3-எம்5 என்ற ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்நிலையில் இதன் மாதிரி செயற்கைக்கோளுடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் திருமலைக்கு வந்து நேற்று விஐபி பிரேக் நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அப்போது மாதிரி செயற்கைக்கோளை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபட்டனர்.
கோயிலுக்கு வெளியே இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசும்போது, “சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் தகவல் தொழில்நுட்பத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தும். இது 4,410 கிலோ எடை கொண்டது. இந்திய மண்ணில் இருந்து இதுவரை ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டது” என்றார்.