சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜேனிஸ் டிஜென்-கிம்பெர்லி

சென்னை,

2-வது சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 82-வது இடத்தில் இருக்கும் இந்தோனேசிய வீராங்கனை ஜேனிஸ் டிஜென் 7-6 (8-6), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் 171-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் லன்லானா தாராருடீயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிரெலி சரிவில் இருந்து மீண்டு 6-7 (2-7), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஜோவன்னா கார்லேன்டை சாய்த்து இறுதிப்போட்டியை எட்டினார்.

இரட்டையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்டார்ம் ஹன்டர் (ஆஸ்திரேலியா)-மோனிகா (ருமேனியா) இணை 7-6 (7-3), 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மாய் ஹோண்டாமா-ஐகியோ ஓமே ஜோடியை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.