ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம்

சென்னை: சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டத்​தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் புதிய வசதி செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளளது.

இது தொடர்​பாக சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யின் ஒருங்​கிணைப்பு அதி​காரி ஆனந்த்​கு​மார் கூறிய​தாவது: ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் உள்ள இந்த பன்​னோக்கு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டம் 4 வித​மான கட்​ட​ணத்​தில் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதில், ‘பிளாட்​டினம் பிளஸ்’ திட்​டம் ரூ.4,000 கட்​ட​ணம் கொண்​டது.

இதில், உடற்​ப​யிற்சி செய்​யும்​போது இதயத்​தின் செயல்​பாட்டை தெரிந்து​கொள்ள, ‘டிரெட்​மில்’ என்ற பரிசோதனை செய்யப்​படு​கிறது. இந்த சோதனையை செய்​து​கொள்ள பலர் முன்​வந்​தா​லும், உயர் ரத்த அழுத்​தம் போன்ற காரணங்​களால் அனை​வருக்​கும் செய்ய முடிவ​தில்​லை. இதனால், இசிஜி, எக்​கோ ஆகிய​வற்​றுடன் இதய அடைப்பை 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, ‘சிடி கால்​சி​யம் ஸ்கோரிங்’ என்ற பரிசோதனை முறை​யில், ரத்​தத்தை எடுத்​துச் செல்​லும் ரத்த நாளங்​களில் அடைப்பு இருக்​கிறதா என்று கண்​டறிந்​து, எங்கு அடைப்பு இருக்​கிறது, எந்த அளவுக்கு கொழுப்பு படிந்​துள்​ளது என்​பதை துல்​லிய​மாக தெரிந்து கொள்​ளலாம். தனி​யார் மையங்​களில் இந்த ஒரு பரிசோதனைக்கு மட்​டுமே ரூ.4,000 வரை செல​வாகும்.

முழு உடல் பரிசோதனைக்​கான பிளாட்​டினம் பிளஸ் திட்​டத்​தில், ‘டிரெட்​மில்’ சோதனைக்கு பதிலாக, இந்த பரிசோதனையை செய்து கொள்​ளலாம். இதில் ஊசி, மருந்து இல்​லாமல் எளிய முறை​யில், 2 நிமிடத்​தில் பரிசோதனை முடிவு​கள் கிடைக்​கும். அதே​நேரம், சுய​விருப்​பம் இருந்​தா​லும், மருத்​து​வ​மனை​யில் உள்ள இதய மருத்​து​வர்​கள் பரிந்​துரை செய்​தால் மட்​டுமே இந்த பரிசோதனை செய்​யப்​படும் என்று அவர்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.