இந்தியா vs ஆஸ்திரேலியா டி20: டிராவிஸ் ஹெட் நீக்கம்? காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவிற்கு எதிரான பரபரப்பான T20 தொடரின் இறுதிக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், அவரது விலகலுக்கு மோசமான form காரணம் அல்ல; மாறாக ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் தொடருக்கான தயாரிப்பே இதன் பின்னணியில் உள்ளது.

Add Zee News as a Preferred Source

Ashes தொடர்

டிராவிஸ் ஹெட்டின் இந்த திடீர் முடிவுக்கு முக்கிய காரணம், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் பாரம்பரியமிக்க Ashes தொடர் தான். நவம்பர் 21ம் தேதி தொடங்கவுள்ள இந்த கௌரவமிக்க Test cricket தொடருக்கு தயாராகும் பொருட்டு, உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக, நவம்பர் 10ம் தேதி டாஸ்மேனியாவுக்கு எதிராக தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக Sheffield Shield போட்டியில் விளையாட உள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வாளர்கள், வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தனர். ஒன்று, இந்தியாவிற்கு எதிரான T20 தொடரை முழுமையாக விளையாடுவது அல்லது Ashes தொடருக்காக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று தங்களை தயார்படுத்தி கொள்வது. இதில் டிராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்து, இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்துள்ளார். இதன் மூலம், அவர் அணியில் இருந்து நீக்கப்படவில்லை, மாறாக தனது எதிர்கால திட்டங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

தற்போதைய தொடரில் ஹெட்டின் பங்களிப்பு

இந்தியாவுக்கு எதிரான தற்போதைய T20 தொடரில் டிராவிஸ் ஹெட்டுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மழையால் கைவிடப்பட்ட முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையில், இரண்டாவது போட்டியில் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், மூன்றாவது போட்டியில் வெறும் 6 ரன்களில் அவர் ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தது.

தற்போது இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மூன்றாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் கடைசி இரண்டு போட்டிகளில் டிராவிஸ் ஹெட் விளையாடாதது, ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு சிறிய பின்னடைவாக இருக்கலாம். அவரது அதிரடியான தொடக்கம் அந்த அணிக்கு முக்கிய பலமாக இருந்து வந்தது. தற்போது, அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. அதே சமயம், டிராவிஸ் ஹெட் தனது முழு கவனத்தையும் உலகின் மதிப்புமிக்க டெஸ்ட் தொடரான Ashes-ஐ நோக்கித் திருப்பியுள்ளார்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.