`ஜனநாயகன்' இயக்குநர் வினோத் பழனியில் சாமி தரிசனம்

‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை,  போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் வினோத்.  தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார்.  பட வேலைகள் எல்லாம் முடிந்து வரும் ஜனவரி  9 ஆம் தேதி ஜனநாயகன் படம்  திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவருடன் நந்தன் பட இயக்குநர் ரா.சரவணனும் உடன் வந்திருந்தார். இருவரும் சாயரட்ச்சை பூஜையில் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் உள்ள முருகனை தரிசித்தனர்.

ஜனநாயகன் பட இயக்குநர் வினோத் மற்றும் இயக்குநர் ரா.சரவணன்

இயக்குநர் வினோத் வந்திருந்ததைப் பார்த்த பொதுமக்கள்  ஆர்வத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர் ரோப் கார்  வழியாக கோயிலில் இருந்து கீழே சென்று கிளம்பி சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.