Rohit Sharma Latest News: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. இது சரித்திர நிகழ்வாக மாறியது. வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மைதானத்தில் இருந்த ரோகித் சர்மா கண் கலங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில், ரோகித் சர்மாவின் மற்றொரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Add Zee News as a Preferred Source
ரோகித் சர்மா செய்த செயல்
இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி போட்டி நவி மும்பையில் இருக்கும் டிஒய் பாட்டீல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை காண பிரபலங்கள் பலரும் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். அந்த வகையில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, அவரது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் விஜபி அறையில் அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகில் நீதா அம்பானியும் அமர்ந்திருந்தார். போட்டியை விறுவிறுப்பாக பார்த்த நீதா அவ்வப்போது மொபைல் ஃபோனையும் பயன்படுத்தினார்.
வைரலாகும் வீடியோ
அப்போது, அருகில் இருந்த ரோகித் சர்மா, நீதா அம்பானியின் மொபைல் ஃபோனை எட்டி பார்த்தார்.இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் ஒரு பெரிய மனுசன் செய்யற வேலையா இது என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே ரோகித் சர்மா கண் கலங்கி அழுத வீடியோ உணர்வுப்பூர்வமாக பரவிய நிலையில், தற்போது இந்த வீடியோ நகைச்சுவையாக வைரலாகி வருகிறது.
ரோகித் சர்மாவின் அடுத்த போட்டிகள்
ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற உடனேயே டி20 கிரிக்கெட் வடிவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் இந்த ஆண்டு மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுத்த நிலையில், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் விளையாடி சில சாதனைகளையும் படைத்தார். தொடர் நாயகன் விருது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ரோகித் சர்மா இதையடுத்து நியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
                  
                  R Balaji