சென்னை: முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன். இவர் தற்போது அதிமுக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். தீவிர ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது மட்டுமின்றி, திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருந்த மறைந்த சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் எழுந்துள்ள உள்கட்சி மோதல் காரணமாக, பலர் திமுகவுக்கு சென்றுகொண்டிருப்பதுடன், திமுகவில் சேரும் மனநிலையிலும் உள்ளனர். ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், திமுக தலைவரை சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் அடுத்ததாகவும் […]