புதிய தலைமுறை ஹூண்டாய் Venue 2026 மாடல் இந்திய சந்தையில் ரூ. லட்சம் முதல் ரூ.7.90 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, நவீன பாதுகாப்பு சார்ந்த ADAS தொழில்நுட்பம், நவீன இன்டீரியர் வடிவமைப்பு, மற்றும் மேம்பட்ட அம்சங்கள் ஆகியவை காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது.
ஹூண்டாய் Venue விலை விவரம்
புதிய வென்யூ காருக்கான வேரியண்ட் வரிசைகளில் தற்பொழுது HX 2 , HX 4, HX 5, HX 6, HX 6T, HX 8, HX 10 ஆகியவற்றுடன் டீசல் வரிசையில் HX 2 , HX 5, HX 7, HX 10 ஆகியவை கிடைக்க உள்ளது.
புதிய வென்யூ சிறப்பம்சங்கள் என்ன..!
தோற்ற அமைப்பில் குறிப்படதக்க வகையில் முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகள் தனது க்ரெட்டா எஸ்யூவ காரிலுருந்து பெற்றுள்ள வென்யூ எஸ்யூவியில் முன்புறத்தில் புதிய ஸ்பிளிட் LED ஹெட்லேம்ப்கள், செவ்வக வடிவில் அடுக்கப்பட்ட கிரில், மற்றும் பெரிதாக்கப்பட்ட பம்பர் டிசைன் ஆகியவை காணப்படுகிறது.
வாகனத்தின் பக்கவாட்டிலும் புதிய அலாய் வீல்கள், புதிய வெனியூ காரில் கருப்பு நிற சி-தூண் சில்வர் நிறத்தை பெற்று அதில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, மேலும் 16 அங்குல அலாய் வீல்களுக்கு ஒரு புதிய வடிவமைப்பு
பின்புறத்தில் LED லைட் பார் கொண்டு நடுவில் ‘Venue’ எழுத்துக்களைக் கொண்டு, பின்புற பம்பரில் டூயல் டோனை பெற்று கிளாடிங் கொண்டுள்ளது. இருபுறமும் L- வடிவ விளக்குகள் கொண்டு நகர்புற மற்றும் குடும்ப தேவைகளுக்கான பயனர்களை ஒரே நேரத்தில் கவரும் வகையில் உள்ளது.


இன்டீரியரில் இரட்டை 12.3 இன்ச் திரைகள் வழங்கப்பட்டு ஒன்று டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மற்றொன்று முழுமையான டிஜிட்டல் கிளஸ்டர் ஆகும். இதனுடன் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, Over-the-Air (OTA) அப்டேட், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ப்ளூலிங்க் கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மென்பொருள் சார்ந்த SDV சார்ந்த மேம்பாடுகளை பெற்றதாக அமைந்துள்ள முதல் காம்பேக்ட் எஸ்யூவி ஆகும்.
பாதுகாப்பு சார்ந்த முக்கிய அம்சங்கள்..!
மிகப் பெரிய மேம்பாடு அதன் Level 2 ADAS (Advanced Driver Assistance System) ஆகும். இதில் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், டிரைவர் அட்டென்ஷன் மானிட்டரிங், ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற முக்கிய அம்சங்கள் உள்ள வசதிகள் டாப் வேரியண்டில் இடம்பெற்றிருக்கும்.
மற்றபடி, 6 ஏர்பேக்குகள், ESC, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், மற்றும் 360 டிகிரி சரவுண்ட் கேமரா ஆகிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.


என்ஜின் ஆப்ஷன்
முதலில், Kappa 1.2 லிட்டர் MPI பெட்ரோல் என்ஜின் 83 PS அதிகபட்ச பவரை 6000 r/min-லும் அதிகபட்ச டார்க் 114.7 Nm இது 4200 r/min-ல் கிடைக்கும். இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலை மாடல் மைலேஜ் லிட்டருக்கு 18.05 கிமீ வெளிப்படுத்தும்.
அடுத்து, Kappa 1.0 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் என்ஜின் அதிகபட்ச பவர் 120 PS ஆனது 6000 r/min-ல், அதே சமயம், 172 Nm அதிகபட்ச டார்க் 1500 முதல் 4000 r/min வரை வழங்குகின்றது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT (Dual Clutch Transmission) இரண்டிலும் கிடைக்கிறது.
டர்போ பெட்ரோல் மைலேஜ் மேனுவல் லிட்டருக்கு 18.74 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் 20 கிமீ வரை லிட்டருக்கு வெளிப்படுத்தும்.
இறுதியாக டீசல் விருப்பமாக U2 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் ஆனது 116 PS பவரை 4000 r/min-ல், அதிகபட்ச டார்க் 250 Nm ஆனது 1500 முதல் 2750 r/min வரை கிடைக்கும். டீசல் மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டு விருப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வென்யூ டீசல் மைலேஜ் ஆனது மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.99 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 17.99 கிமீ ஆகும்.
வென்யூ போட்டியாளர்கள் யார் ?
4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள சந்தையின் போட்டியாளர்களான டாடா நெக்ஸான், பிரெஸ்ஸா, சோனெட், XUV 3XO, கைலாக், மேக்னைட், கிகர் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
		







