சேலம்: வாழப்பாடி அருகே காரில் சென்றுகொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ அருள் மீது ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அன்புமணி ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதல் இன்று கைகலப்பாக மாறி உள்ளது. பாமகவில் அன்புமணியை நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தான் பாமக தலைவர், எனக்கே கட்சியினர் ஆதரவு உள்ளது என தனி […]