விற்பனை விவரம், கணக்கில் செலுத்திய தொகை இடையே மாறுபாடு இருந்தால் பணியாளர்கள் மீது நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: மது​பான விற்​பனை விவரம், டாஸ்​மாக் கணக்​கில் செலுத்​திய தொகை இடையே மாறு​பாடு இருந்​தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என, டாஸ்​மாக் நிர்​வாகம் எச்​சரித்​துள்​ளது.

இதுகுறித்​து, டாஸ்​மாக் மேலாண் இயக்​குநர், மாவட்ட மேலா​ளர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மது​பானக் கடைகளில் மது​பானங்​கள் விற்​பனை ரொக்​கம், கார்டு மற்​றும் யுபிஐ ஆகியவை மூலம் நடை​பெறும் நிகழ்​வு​களில், மது​பானங்​களின் அதி​கபட்ச சில்​லறை விற்​பனை விலை​யில் மட்​டுமே அவை​களை விற்​பனை செய்து இருக்க வேண்​டும்.

இந்த நடை​முறை​யில் வேறு​பாடு நிகழக் கூடாது. ரொக்​கம், கார்டு மற்​றும் யுபிஐ மூலம் மது​பானங்​களின் அதி​கபட்ச விற்​பனை விலையை விட கூடு​தலாக விற்​பனை தொகை பெறப்​பட்​டிருந்​தால், பெறப்​பட்ட முழு தொகை​யினை​யும் அப்​படியே டாஸ்​மாக் கணக்​கில் செலுத்த வேண்​டும்.

மது​பானக் கடைகளில் தினந்​தோறும் கணினி மயமாக்​குதலுக்​காக வழங்​கப்​பட்ட கையடக்க கரு​வி​யில் உள்ள ரொக்க விற்​பனை மற்​றும் கார்டு மூலம் நடை​பெற்ற விற்​பனையை கடை பணி​யாளர்​கள், வங்​கி​யில் செலுத்​திய பணம் மற்​றும் கார்டு மூலம் நடை​பெற்ற விற்​பனை விவரங்​களை​யும் ஒப்​பீடு செய்து வேறு​பாடு கண்​காணிக்க வேண்​டும். மேலும், மாவட்ட மேலா​ளர் அலு​வல​கத்​தில் இந்த பணி​யினை ஒரு இளநிலை உதவி​யாள​ருக்கு பணி ஒதுக்​கீடு செய்து கண்​காணிக்க வேண்​டும்.

இதற்​காக தனி​யாக கோப்பு தயார் செய்து மாவட்ட மேலா​ள​ருக்கு தின​மும் சமர்ப்​பிக்க பணிக்க வேண்​டும். ரொக்​கத்​தில் விற்​பனை செய்த தொகை முழு​வதும் அந்​தந்த மது​பானத்​துக்கு உரிய அதி​கபட்ச சில்​லறை விற்​பனைத் தொகை​யில், அதாவது, அவை முழு​வதற்​கும் உரிய அதி​கபட்ச சில்​லறை விற்​பனை தொகை​யின் கூட்​டுத் தொகை​யில் எந்த குறை​பாடும் இன்றி அடுத்த நாள் வங்​கி​யில் செலுத்​தப்​பட்​டதா என சரி​பார்த்து தினசரி உறுதி செய்ய வேண்​டும். இதில் குறை​பாடு இருப்​பின், அதனை விற்​பனை தொகை கையாடல் செய்​துள்​ள​தாக முடிவு செய்து அது தொடர்​பான ஒழுங்கு நடவடிக்​கைகள் எடுக்க வேண்​டும்.

அதாவது, குறைவுத் தொகையை முழு​வது​மாக வசூல் செய்​தல், குறைவுத் தொகை மீது 50 சதவீதம் அபராதத் தொகை வசூல் செய்​தல், குறைவுத் தொகை மீது 2 சதவீதம் மாதவட்டி வசூல் செய்​தல், அபராத தொகை மற்​றும் வட்​டித் தொகை மீது ஜிஎஸ்டி வசூல் செய்​தல். மேற்​கண்ட அனைத்து நடவடிக்​கைகளும் விடு​தலின்றி செய்ய வேண்​டும்.

இது தொடர்​பாக, மாவட்ட மேலா​ளர் அலு​வல​கத்​தில் அனைத்து விற்​பனை​களின் விற்​பனை விவரங்​கள் முழு​மை​யாக தொகுத்து கண்​காணிக்​கப்பட வேண்​டும். ஏதேனும் ஒரு கடை​யில் மாறு​பாடு​கள் இருப்​பின், அந்த கடை​யினை அன்​றைய தினமே முழு​மை​யாக ஆய்​வுக்கு உட்​படுத்​தப்பட வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.