“இது வாரிசு அரசியல் அல்ல… நாட்டுக்கான எங்கள் தர்மம்!” – பிஹாரில் பிரியங்கா காந்தி பேச்சு

பாட்னா: காங்கிரஸ் வாரிசு அரசியலை பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டுபவர்களால், எங்கள் முன்னோர்கள் செய்த தியாகங்களை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என பிரியங்கா காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சம்பாரண் மாவட்டத்தின் வால்மிக நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, “நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறோம். நாட்டின் செல்வம் உங்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். எங்கள் முன்னோர்கள் சுதந்திரத்துக்காகப் போராடினர். உங்கள் முன்னோர்களில் பலரம் சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகங்களை செய்துள்ளனர்.

இங்குள்ள மண் உங்கள் ரத்தத்திலும் எங்கள் ரத்தத்திலும் ஊறியுள்ளது. ஆனால், வாரிசு அரசியல் இருப்பதாக மேடைகளில் கதறுபவர்களால், எங்கள் முன்னோர்கள் புரிந்த தியாகங்களை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. இது வாரிசு அரசியல் அல்ல. மாறாக, நாட்டுக்கான எங்கள் தர்மம்.

காலை முதல் மாலை வரை பாஜக தலைவர்கள் நேருவை அவமதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை பாதிக்கும் அனைத்து தீமைகளுக்கும் அவரையே குற்றம் சாட்டுகிறார்கள். அதேநேரத்தில், நியூயார்க் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், நேருவை புகழ்ந்து பேசி உள்ளார். ஆனால், நேருவின் சொந்த நாட்டில் அவர் மீது தினமும் அவமானங்கள் குவிக்கப்படுவதைக் காண்கிறோம்.

பிஹாரில் எளிய மக்களின் வாக்களிக்கும் உரிமை ஆபத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு எனது சகோதரர் ராகுல் காந்தி, அவர்களுக்காக யாத்திரை மேற்கொண்டார். அந்த வாக்காளர் அதிகார யாத்திரையில் நானும் சிறிது கலந்து கொண்டேன். தற்போது எனது சகோதரர் ஹரியானாவில் நடந்த வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தி உள்ளார். வாக்காளர் உரிமை குறித்து நாங்கள் பேசும்போது, ஊடுருவியர்களுக்காக நாங்கள் பணியாற்றுவதாக பிரதமர் மோடி கூறுகிறார். மக்களே, நீங்கள் உங்களை ஊடுருவியவர்களாகக் கருதுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

சசி தரூர் விமர்சனம்: முன்னதாக, வாரிசு அரசி​ய​லால் இந்​திய ஜனநாயகத்​துக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருப்பதாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரிவித்திருந்தார். செக் குடியரசை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் சர்​வ​தேச ஊடக​மான புராஜெக்ட் சிண்​டிகேட்-டில் ‘இந்​திய அரசி​யல் – குடும்ப வணி​கம்’ என்ற தலைப்​பில் சசி தரூர் எழுதிய கட்டுரையில், “இந்​தி​யா​வில் கிராம பஞ்​சா​யத்து முதல் நாடாளு​மன்​றம் வரை குடும்ப அரசி​யல் வியாபித்து பரவி இருக்​கிறது. நாடு சுதந்​திரம் அடைந்தது முதல் இந்​திய அரசி​யலில் ஜவஹர்லால் நேரு குடும்​பம் ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது. நாட்​டின் முதல் பிரதம​ராக நேரு பதவி​யேற்​றார்.

இதன் பிறகு அவரது மகள் இந்​திரா காந்தி பிரதம​ரா​னார். அடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதம​ராக பதவி வகித்​தார். தற்​போது நேரு குடும்​பத்தை சேர்ந்த ராகுல் காந்தி மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருக்​கிறார். அவரது தங்கை பிரி​யங்கா காந்தி எம்​.பி.​யாக உள்​ளார். இந்​தி​யா​வின் ஒவ்​வொரு கட்​சி​யிலும் ஒவ்​வொரு பிராந்​தி​யத்​தி​லும் வாரிசு அரசி​யல் நீடித்து வரு​கிறது. நாடு முழு​வதும் 11 மத்​திய அமைச்​சர்​கள், 9 முதல்​வர்​கள் வாரிசு அரசி​யலின் உதா​ரணங்​களாக விளங்​கு​கின்​றனர்.

வாரிசு அரசி​ய​லால் இந்​திய ஜனநாயகத்​துக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருக்​கிறது. திறமையை புறந்​தள்ளி வாரிசுகளுக்கு முன்​னுரிமை அளிப்​ப​தால் ஆட்சி நிர்​வாகத்​தில் பெரும் பின்​னடைவு ஏற்​பட்டு வரு​கிறது. வாரிசு அரசி​யல் பிரச்​சினைக்கு தீர்வு காண அடிப்​படை சீர்த்​திருத்​தங்​கள்​ அவசி​ய​மாகிறது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.