வாகா எல்லை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 குற்றவாளிகளை விடுதலை செய்த பாகிஸ்தான் கோர்ட்டு

இஸ்லாமாபாத்,

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த வாகா எல்லை குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பான குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் கைதான 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 300 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு மனு லாகூர் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், கைதானவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.