Apology Trend: 'மன்னிப்புக் கடிதம்தான் பாஸ் இப்போ டிரெண்ட்!' – எதனால் இதை நிறுவனங்கள் செய்கின்றன?

சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டிரெண்ட் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அப்படி சமீபத்தில் ஹஸ்கி நாய் நடனமாடும் காணொளி பெரும் வைரலானது. நடிகர்கள் தொடங்கி பலரும் அந்த டிரெண்ட் நடனத்தை ரீகிரியேட் செய்திருந்தார்கள்.

தற்போது அந்த டிரெண்டைத் தொடர்ந்து பிராண்ட் நிறுவனங்கள் பலவும் மன்னிப்புக் கோரும் நகைச்சுவைக் கடிதத்தை வெளியிட்டு டிரெண்டை வைரலாக்கி வருகின்றன.

Skoda - Apology Statement
Skoda – Apology Statement

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல நிறுவனங்கள் தங்கள் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட் கொண்ட கடிதத்தில் இதனை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில்தான் இந்த மன்னிப்புக் கடிதம் டிரெண்ட் முதலில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதலில் ஸ்கோடா நிறுவனம் இந்த டிரெண்டைத் தொடங்கி வைத்தது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ரிலையன்ஸ், பி.வி.ஆர், ஜீ எனப் பல நிறுவனங்களும் இந்த டிரெண்டில் இணைந்து மன்னிப்புக் கடிதங்களை வெளியிட்டிருக்கின்றன.

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட கடிதத்தில், “ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஷாப்பிங் செய்த பிறகு வாடிக்கையாளர்கள் சில எதிர்பாராத பக்க விளைவுகளை எதிர்கொள்கின்றனர் என்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

Reliance - Apology Statement
Reliance – Apology Statement

வாடிக்கையாளர்கள் வேறு இடங்களில் விலைகளை இருமுறை சரிபார்த்து, எங்கள் ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட விலைகள் யாராலும் அடிக்க முடியாதவை என்பதை உணர்கின்றனர்” எனப் குறிப்பிட்டிருக்கிறது.

இதுபோல, பல நிறுவனங்களும் தங்களின் பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் வகையில் இப்படியான கடிதங்களைப் பதிவிட்டிருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.