குஜராத்தில் 3 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் கைது எதிரொலி: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீஸார்

சென்னை: ​நாட்​டின் பல்​வேறு பகு​திகளில் நிகழ்த்​தப்பட இருந்த ரசாயன தாக்​குதல் திட்​டம் முறியடிக்​கப்​பட்ட நிலையில், தமிழகத்தில் தீவிர​வாத தடுப்​புப் பிரிவுபோலீ​ஸார் கண்காணிப்பை முடுக்​கி​விட்டு உள்​ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் பெஹல்​காமில் கடந்த ஏப்​ரலில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். பின்​னர் இந்​தியா பாகிஸ்​தானுக்​குள் புகுந்து தீவிர​வா​தி​கள் முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்தி பதிலடி கொடுத்​தது. இதற்கு பதிலடி​யாக தீவிர​வா​தி​கள் மீண்​டும் இந்​தி​யா​வுக்​குள்புகுந்து நாச வேலைகளில் ஈடுபடவாய்ப்பு உள்​ள​தாக மத்திய புல​னாய்​வுத் துறை எச்​சரித்​தது.

எனவே அனைத்து மாநில போலீ​ஸாரும் உஷார்​படுத்​தப்​பட்​டனர். மாநிலங்​களில் கண்​காணிப்பை அதி​கரிக்கப்பட்டன. மேலும் மத்​திய உளவுப் பிரிவுபோலீ​ஸாரும் கண் காணிப்பைவிரிவுபடுத்​தினர். இந்​நிலை​யில்புதிய வடிவி​லான ஒருங்கிணைந்த தாக்​குதல்​களை தீவிர​வா​தி​கள் இந்​தி​யா​வில் பல்​வேறு மாநிலங்​களில் நிகழ்த்த சதித்​திட்​டம் தீட்​டிய தகவல் வெளி​யானது. இதையடுத்​து, அனைத்து மாநிலங்​களி​லும் கண்​காணிப்பு மீண்​டும் முடுக்​கி​விடப்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக குஜ​ராத் மாநில பயங்​கர​வாத தடுப்​புப் படை​யினர், அங்​குள்ள காந்​தி நகர் அதலஜ் சுங்​கச்​சாவடி அருகே 2 நாட்​களுக்கு முன்பு கண்​காணித்​தனர். அப்​போது அந்த வழி​யாக வந்த காரை சந்தேகத்தின்​பேரில் சோதித்​தபோது அதில் 3 துப்​பாக்​கி​கள், 30 தோட்​டாக்​கள், ஆபத்தான ‘ரிசின்’ என்ற ரசாயன திர​வம் 4 லிட்​டர் இருந்​ததை கண்​டறிந்து அவற்றை பறி​முதல் செய்​தனர்.

‘ரிசின்” என்​பது ஆமணக்கு விதைகளின் கழி​வுப் பொருட்​களி​லிருந்து கிடைக்​கும் மிக அதிக நச்​சுத்​தன்மை கொண்ட ஒரு ரசாயன விஷ​மாகும். அதைக்கொண்டு நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் ரசாயனத் தாக்​குதல் நடத்த தீவிர​வா​தி​கள் திட்​ட​மிட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்து இதில் தொடர்​புடைய, ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​பிலிருந்து காரை ஓட்டி வந்த ஹைதரா​பாத்​தைச் சேர்ந்த அகமது முகை​தீன் உட்பட 3 பேர் கைது செய்தனர். விசா​ரணை​யில் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் அவர்​கள் தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​டிருந்​தது உறுதி செய்​யப்​பட்டது.

இதையடுத்​து, எந்​தெந்த இடங்களை அவர்​கள் தேர்வு செய்​தனர், எப்​படிப்​பட்ட தாக்​குதலை நடத் தத் திட்​ட​மிட்​டிருந்​தனர் என்​பது குறித்து தொடர்ந்து விசா​ரிக்​கப்​பட்டு வரு​கிறது. இதையடுத்​து, தமிழக தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக தமிழகம் முழு​வதும் கண்​காணிப்பை அதி​கரித்​துள்​ளனர். மேலும், அனைத்து மாவட்ட உளவு மற்​றும் நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸாருடன் ஒருங்​கிணைந்து கண்​காணிக்​கின்​றனர். கடல்​வழி பாது​காப்​பும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. சந்​தேக நபர்​களின் நடமாட்​டம் தென்​பட்​டால் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு உடனடி​யாக தெரிவிக்​கும்​படி பொது​மக்​களுக்கு போலீ​ஸார் வேண்​டுகோள் விடுத்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.