டாஸ்மாக் முறைகேடு புகாரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய அமலாக்கத் துறையின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

புதுடெல்லி: ​டாஸ்​மாக் முறை​கேடு புகாரில் திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரனின் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குக்கு தடை கோரிய அமலாக்​கத் துறை மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்​மாக் முறை​கேடு புகார் தொடர்​பாக, திரைப்பட தயாரிப்​பாளர் ஆகாஷ் பாஸ்​கரன், தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரின் வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் அமலாக்​கத் துறை​யினர் சோதனை நடத்​தி வீடு​கள் மற்​றும் அலு​வல​கத்​துக்கு சீல் வைத்​தனர்.

அமலாக்​கத் துறை நடவடிக்​கைக்கு எதிராக ஆகாஷ்பாஸ்​கரன் மற்​றும் விக்​ரம்ரவீந்​திரன் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இதை விசா​ரித்த நீதி​மன்​றம் டாஸ்​மாக் முறை​கேட்​டில் ஆகாஷ் பாஸ்​கரன், விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோ​ருக்கு தொடர்பு உள்​ளது என்​ப​தற்கு அமலாக்​கத் துறை​யிடம் எந்த ஆதா​ரங்​களும் இல்​லை. ஆதா​ரங்​கள் இல்​லாத நிலை​யில், இரு​வரின் வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தவும், பறி​முதல் செய்​ய​வும் அமலாக்​கத் துறைக்கு எந்த அதி​காரவரம்​பும் இல்லை எனக் கூறி, அமலாக்​கத் துறை​யின் மேல் நடவடிக்​கைகளுக்கு இடைக்​கால தடை விதித்து கடந்த ஜூன் 20-ம் தேதி உத்​தர​விட்​டது.

தடையை மீறி, ஆகாஷ் பாஸ்​கரனிடம் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் தொடர்​பாக அமலாக்​கத் துறை​யின் மேல்​முறை​யீட்டு அதி​காரி சம்​மன் அனுப்​பி​யுள்​ள​தாக, ஆகாஷ் பாஸ்​கரன் சார்​பில் நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தாக்​கல் செய்யப்​பட்​டது. வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அமலாக்​கத் துறை உதவி இயக்​குநரான விகாஸ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து அமலாக்​கத் துறை சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே. மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது. அமலாக்​கத் துறை​யின் வாதத்தை நிராகரித்த நீதிப​தி​கள், தற்​போதைய நிலை​யில் சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வில் தலை​யிட விரும்​ப​வில்​லை. இந்த மேல்​முறை​யீடு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது என்று உத்​தர​விட்​டனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.