அரியலூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின

அரியலூர்: அரியலூர் அருகே காஸ் சிலிண்​டர் ஏற்றி வந்த லாரி நேற்று சாலை​யோர பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்​துள்​ளானது. அப்​போது, சமையல் காஸ் சிலிண்டர்​கள் வெடித்​துச் சிதறியதால் பரபரப்பு ஏற்​பட்டது. திருச்​சி​யில் இருந்து சமையல் காஸ் சிலிண்​டர்​களை ஏற்​றிக்​கொண்டு லாரி ஒன்று நேற்று முன்​தினம் இரவு அரியலூருக்​குப் புறப்​பட்​டது. திருச்சி இனாம்​குளத்​தூர் பகு​தியை சேர்ந்த கனக​ராஜ்(34) லாரியை ஓட்​டி​னார்.

நேற்று காலை 6.40 மணி​யள​வில் வாரண​வாசியை அடுத்த விநாயகர் கோயில் வளை​வில் திரும்​பிய​போது, திடீரென ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த லாரி சாலை​யோர பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில், சிலிண்​டர்​கள் ஒன்​றோடு ஒன்று உரசி​ய​தால் தீப்​பற்றி எரி​யத் தொடங்​கி, வெடித்​துச் சிதறின. ஓட்​டுநர் கனக​ராஜ் காயத்​துடன் அங்​கிருந்து தப்​பி​னார்.

தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்பு வீரர்​கள் தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். கூடு​தலாக திரு​மானூர், பெரம்​பலூர், செந்​துறை மற்​றும் ஜெயங்​கொண்​டம் உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்​தும் தீயணைப்பு வாக​னங்​கள் வரவழைக்​கப்​பட்​டன. சுமார் 3 மணி நேரத்​துக்கு பிறகு தீ அணைக்​கப்​பட்டு கட்​டுக்​குள் கொண்​டு​வரப்​பட்​டது.

லாரி​யில் இருந்த 350 சிலிண்​டர்​களில் 100-க்​கும் மேற்​பட்ட சிலிண்​டர்​கள் வெடித்​துச் சிதறின. இவற்றின் சப்​தம் பல கி.மீ. தொலை​வுக்கு கேட்​டது. 500 மீட்​டர் தூரத்​துக்கு சிலிண்​டர்​கள் தூக்கி வீசப்​பட்​டன.

சிலிண்​டர்​கள் வெடித்து சிதறிய​போது 30 அடி உயரத்​துக்கு மேல் தீ ஜூவாலை எழும்​பியது. மேலும், அப்​பகுதி முழு​வதும் 50 அடி உயரத்​துக்கு கரும்​புகை காணப்​பட்​டது. இந்த விபத்​து காரணமாக திருச்​சி-அரியலூர் சாலை​யில் 3 மணி நேரம் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.