ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பா? வாய்ப்பே இல்லை.. ராஜஸ்தான் அந்த தப்ப பண்ண மாட்டாங்க!

Ravindra Jadeja vs Yashasvi Jaiswal: 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடருக்கு முன்னதாக வடும் டிசம்பர் நடுப்பகுதியில் அதாவது 14, 15 தேதிகளில் மினி ஏலம் நடக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. முக்கிய வீரர்கள் சிலர் அணிகள் மாற இருப்பதால் நாளுக்கு நாள் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

Ravindra Jadeja vs Yashasvi Jaiswal: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்லும் ஜடேஜா 

குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது டிரேட் செய்திகள் அனைவரையும் ஆக்கிரமித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேல் உள்ள அதிருப்தி காரணமாக சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக அவர் முடிவு எடுத்துள்ளார். இதனால் அவரை வாங்க சில அணிகள் முண்டியடித்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் தீவிரம் காட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கோரிக்கைக்கு ஓப்புக்கொண்டதாக தெரிகிறது. சஞ்சு சாம்சன் வேண்டும் என்றால் ரவீந்திர ஜடேஜா வேண்டும் என கேட்டதாகவும் அதற்கு சிஎஸ்கே அணியும் ஓப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. 

Ravindra Jadeja vs Yashasvi Jaiswal: அடுத்த கேப்டன் இவர்தான் 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாகி தற்போது சொல்லப்படுவதுபோல் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்த சூழலில், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஜடேஜா வருவார் என பேசப்ப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் வருவார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரையே கேப்டனாக நியமிக்கும். அது யஷஸ்வி ஜெய்ஸ்லாலாக இருக்கும். அதற்கு ஜெய்ஸ்வால் நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு கேப்டன் பதவி கொடுங்கள் என ராஜஸ்தான் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும். 23 வயதே ஆகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார். அதேபோல் சில சீசன்களில் அவர் கேப்டனாக செயல்பட்டால் அவருக்கு அதன் அனுபவமும் கிடைக்கும். எனவே இதையெல்லாம் சிந்தித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வாலை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா கூறினார்.  

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.