கோயமுத்தூர்: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று 8வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்! காவல்ஆணையர் அருண் கூறியிருந்தார். இந்த நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று 8வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 […]