பிஹாரில் அமோக வெற்றி: 243-ல் 202 தொகுதிகளை கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி – முழு விவரம்

​பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன.

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. பிஹாரில் 243 தொகு​தி​கள் உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் 101, சிராக் பாஸ்​வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 6 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டன. இதில் பாஜக 89 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இதன்​மூலம் அதிக இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக பாஜக உரு​வெடுத்​துள்​ளது.

ஐக்​கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, ராஷ்டிரிய லோக்​ மோர்ச்சா 4, இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றன. அறு​திப் பெரும்​பான்​மைக்கு 122 தொகு​தி​கள் தேவை என்ற நிலை​யில் தே.ஜ.கூட்​டணி 202 தொகு​தி​களைக் கைப்​பற்​றி​யுள்​ளது. கடந்த தேர்​தலை​விட ஆளும் கூட்​டணிக்கு கூடு​தலாக 77 இடங்​கள் கிடைத்​துள்​ளன.

மெகா கூட்​ட​ணிக்கு பெரும் பின்​னடைவு: மெகா கூட்​ட​ணி​யில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்​கிரஸ் 61, இந்​திய கம்​யூனிஸ்ட் – எம்​எல் 20, விஐபி 15, இந்​திய கம்​யூனிஸ்ட் 9, மார்க்​சிஸ்ட் 4, ஐஐபி 3 தொகு​தி​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தின. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் 25, காங்​கிரஸ்
6, இந்​திய கம்​யூனிஸ்ட் – எம்​எல் 2, மார்க்​சிஸ்ட் 1, ஐஐபி 1 தொகு​தி​யில் வெற்றி பெற்​றன. மெகா கூட்டணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​துள்​ளன. கடந்த தேர்​தலை ஒப்​பிடும்​போது மெகா கூட்​டணி 75 இடங்​களை இழந்​துள்​ளது.

64 தொகு​தி​களில் தனித்​துப்​போட்​டி​யிட்ட ஓவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி 5 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. பகுஜன் சமாஜ்கட்சி ஒரு இடத்​தில்
வென்​றது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஆம் ஆத்​மிக்கு ஒரு இடம்​கூட கிடைக்​க​வில்​லை.

துணை முதல்​வர்​கள்: சாம்​ராட் சவுத்ரி (தா​ராபூர்), விஜய்​கு​மார் சின்ஹா (லக்​கி​சா​ராய்) வெற்றி பெற்​றனர். ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ் (ராகோபூர்​)14,532 வாக்குகள் வித்​தி​யாசத்​தில் வென்றார். பிஹார் முதல்​வ​ராக 10-வது முறை​யாக நிதிஷ் மீண்​டும் பதவி​யேற்க உள்​ளார். பிரதமர் மோடி தனது சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘நல்​லாட்​சி, வளர்ச்​சி, சமூக நீதி வெற்றி பெற்​றுள்​ளது. இந்த வெற்​றியை சாத்​தி​ய​மாக்​கிய நிதிஷ் குமார், சிராக் பாஸ்​வான், ஜிதன் ராம் மாஞ்​சி, உபேந்​திர குஷ்​வா​கா​வுக்​கு ​பா​ராட்​டு​கள்​’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.