சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்படாத வழக்குகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு […]