Arjun: “ஜென்டில்மேன் படமும் அப்படிதான்!'' – பட விழாவில் நடிகர் அர்ஜுன்

அறிமுக இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.

நவம்பர் 21-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ்
Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ்

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, திரைப்படம் தொடர்பாக பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அர்ஜூன் பேசுகையில், “எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரி தான். இந்த ‘தீயவர் குலை நடுங்க’ படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் நிறைய அறிமுக இயக்குநர்களோடு சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன்.

‘ஜெண்டில்மென்’ படமும் அப்படித்தான். அதுல ஒரு சுயநலம் இருக்கிறது என்று சொல்லலாம். முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள் எனர்ஜியுடன் செயல்படுவார்கள்.

நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனா, இது கொஞ்சம் தனித்துவமான திரைப்படம்.

Theeyavar Kulai Nadunga - Movie
Theeyavar Kulai Nadunga – Movie

அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “இது உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம். எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொல்லும்போதே நடுங்கிடுச்சு.

ஏன்னா, அப்படியான ஒரு சம்பவம் அது. உண்மையான கதைகளுக்கு எப்போதுமே மக்களுக்கு கனெக்ட் ஆகும். நயன்தாரா மேம் நடித்திருந்த ‘அறம்’, நான் நடித்திருந்த ‘க/பெ ரணசிங்கம்’ போன்ற படங்கள் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

அப்படியான படங்கள் பெரிதளவில் தாக்கத்தைக் கொடுக்கும். இந்தப் படத்துல அர்ஜூன் சாரோடு சேர்ந்து நடிச்சிருக்கேன்.

‘ஜெண்டில்மென்’ தொடங்கி பல படங்கள்ல சாரை ரசிச்சுப் பார்த்திருக்கேன். உண்மையாகவே, அர்ஜூன் சார் ஜென்டில்மேன்தான்,” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.