தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் மீது வழக்கு

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் செயல்​படும் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கியது தொடர்​பாக, அண்ணா பல்கலைக்கழக அதிகாரி​கள் உள்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்​புத் துறை வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது.

தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் 470-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. இதற்​கிடையே 224 தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களில் 353 ஆசிரியர்​கள் ஒரே நேரத்​தில் ஒன்​றுக்​கும் மேற்​பட்ட கல்​லூரி​களில் பணிபுரிவ​தாக கணக்கு காட்​டப்​பட்​டுள்​ளது என்று அறப்​போர் இயக்​கம் குற்​றம்​சாட்​டியது.

மேலும், விதி​முறை​களை பின்​பற்​றாமல் லஞ்​சம் பெற்​றுக்​கொண்டு கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கப்​படு​வ​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதுதொடர்​பாக விசா​ரணை நடத்த அண்ணா பல்​கலைக்​கழகம் தரப்​பில் 3 பேர் கொண்ட விசா​ரணை குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு கல்​லூரி​களில் ஆய்வு செய்​த​போது, எஸ்​.​மாரிச்​சாமி என்ற பேராசிரியர் 11 கல்​லூரி​களில் பணிபுரிவ​தாக ஆவணங்​கள் சமர்ப்​பிக்​கப்​பட்​டிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அதே​போல், ஆய்​வுக்​குழு ஒரே நாளில் இரண்டு வெவ்​வேறு கல்​லூரி​களை ஆய்வு செய்​த​போது, ஒய்​.ரவிக்​கு​மார் என்ற பேராசிரியர் இரு கல்​லூரி​களி​லும் பணி​யில் இருந்​தது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இந்த முறை​கேடு​களுக்கு அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் அதி​காரி​கள் உடந்​தை​யாக இருந்​ததும், உரிய ஆய்வு நடை​முறை​களை பின்​பற்​றாததும்​தான் காரணம் என விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்​து, முறை​கேட்​டில் ஈடு​பட்ட பேராசிரியர்​கள் மற்​றும் தொடர்​புடைய கல்​லூரி​களிட​மும் இந்த குழு விசா​ரணை நடத்​தி​யது. இந்​நிலை​யில், விதி​முறை​களைப் பின்​பற்​றாமல் லஞ்​சம் பெற்​றுக்​கொண்டு அங்​கீ​காரம் வழங்​கிய​தாக அண்ணா பல்​கலை. முன்​னாள் இயக்​குநர் (அங்​கீ​காரத் துறை) இளை​யபெரு​மாள், துணை இயக்​குநர்​கள் (அங்​கீ​காரத் துறை) சித்​ரா,சீலோவா எலிசபெத், முன்​னாள் பதி​வாளர் ஜி.ரவிக்​கு​மார், தற்​போதைய பொறுப்பு பதிவாளர் ஜே.பிர​காஷ், தற்​போதைய இயக்​குநர் வி.ஆர்​.கிரிதேவ், அண்ணா பல்​கலை. (கோவை) துணை இயக்​குநர் எஸ்​.​மார்​ஷல் அந்​தோணி, அண்ணா பல்கலை. (மதுரை) துணை இயக்​குநர்வி.​மால​தி, அண்ணா பல்கலை.(திருச்​சி) துணை இயக்​குநர் எஸ்​.பிரகதீஸ்​வரன், அண்ணா பல்​கலை. (நெல்​லை) துணை இயக்​குநர் எஸ்​.சிலஸ் சற்​குணம் உள்​ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது.

இதே​போல், எஸ்​.​மாரிச்​சாமி, எஸ்​.கண்​ணன், ஒய்​.ரவிக்​கு​மார் ஆகிய பேராசிரியர்​கள், திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், கோவை ஆகிய பகு​தி​களைச் சேர்ந்த
4 தனி​யார் கல்​லூரி​கள் என மொத்​தம் 17 பேர் மீது குற்​றச்​ச​தி, ஏமாற்​று​தல், அரசு ஊழிய​ரால் நம்​பிக்கை மோசடி, ஊழல் தடுப்புச் சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது.

இந்த முறை​கேடு​கள் மூலம் அங்​கீ​காரம் பெறு​வதற்​கான தகுதி இல்​லாத கல்​லூரி​களுக்கு அதி​காரி​கள் அங்​கீ​காரம் வழங்​கி​யுள்​ளனர் என்​றும், இது மாணவர்​களின் கல்​வித் தரத்தை பாதிப்​ப​தாக​வும், இதுதொடர்​பாக புலன் விசா​ரணையை தொடங்​கி​யிருப்​ப​தாக​வும் லஞ்ச ஒழிப்​புத்​துறை தரப்பில் தெரி​விக்கப்பட்டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.