பிஹாரில் 10-வது முறை முதல்வராகிறார் நிதிஷ்

புதுடெல்லி: நாட்டில் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்களில் நிதிஷும் இடம்பெற்றுள்ளார். சுமார் 20 ஆண்டுகும் மேலாக இவர் முதல்வராகப் பதவி வகிக்கிறார்.

முதன்முதலில் இவர் மார்ச் 3, 2000 அன்று முதல்வராகப் பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்ஜேடி கட்சி சார்பில் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு நவம்பர் 2005 தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் முதல்வர் ஆனார்.

கடந்த 2010-ல் நிதிஷ் 3-வது முறை முதல்வரானார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷுக்கு பாஜக முழு ஆதரவளித்தது. பின்னர் 2014-ல் பாஜக.வில் இருந்து நிதிஷ் பிரிந்தார். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ல் மகத்தான வெற்றி பெற்றார். இதில், முதல்வராக நிதிஷ் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ல், அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் என்டிஏ.வுக்கு திரும்பினார். 2020-ல் மறுபடியும் முதல்வரான நிதிஷ்குமார், 2022-ல் மீண்டும் என்டிஏ.வில் இருந்து வெளியேறி ஆர்ஜேடி, காங்கிரஸின் மெகா கூட்டணி சார்பில் முதல்வரானார்.

இதற்கிடையில் மே 24, 2024 முதல் 278 நாட்கள் ஜேடியு ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்வராக இருந்தார். ஜனவரி 2024-ல், நிதிஷ் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் இணைந்து, 9-வது முறையாக முதல்வரானார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்றதால் 10-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்க உள்ளார்.

பிஹாரில் கடந்த மாதம் 26-ம் தேதி பெண்​கள் வேலை​வாய்ப்​புத் திட்​டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். அன்​றைய தினமே இத்​திட்​டத்​தின் கீழ் 1.5 கோடி பெண்​களின் வங்​கிக் கணக்​கு​களுக்கு தலா ரூ.10,000 டெபாசிட் செய்​யப்​பட்​டது. பிஹார் தேர்​தல் அறி​விப்​ப​தற்கு முன்பு இந்​தத் திட்​டம் அறிவிக்​கப்​பட்​ட​தால், நிதிஷ் அரசு வாக்​கு​களை பணம் கொடுத்து வாங்​கு​கிறது என்று எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டின. ஆனால், முதல்​வர் நிதிஷ் தலை​மையி​லான என்​டிஏ கூட்​டணி மிகப்​பெரிய வெற்றி பெற்​றுள்​ளது.

பிஹார் தேர்​தலில் 71 சதவீதத்​துக்​கும் அதி​க​மான பெண் வாக்​காளர்​கள் என்​டிஏ.வுக்கு வாக்​களித்​தனர்​.ரூ.10,000 நிதி​யைப் பெற்ற பெண்​கள் மட்​டுமல்​லாமல், அவர்​களது குடும்​பத்​தினரும் என்​டிஏ.வுக்கு வாக்​களித்​துள்​ளனர்.

இந்​தத் திட்​டத்​தின்​படி, பெண்​கள் ரூ.10,000-த்தை திருப்​பிச் செலுத்த வேண்​டிய​தில்​லை. பெண்​கள் சிறிய வேலை வாய்ப்​பு​களை ஏற்​படுத்தி கொள்​ளவே இந்த தொகை வழங்​கப்​பட்​டது. இதில் பெண்​கள் வெற்​றிகர​மாக வேலை​வாய்ப்பை உரு​வாக்​கி​னால், அவர்​களுக்கு கூடு​தலாக ரூ.2 லட்​சம் கடனை பிஹார் அரசு வழங்​கும் என்று உத்​தர​வாதம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுபோன்ற திட்​டங்​களால் முதல்​வர் நிதிஷ் மீது மக்​கள் மிகுந்த நம்​பிக்கை வைத்து தேர்​தலில் வாக்​களித்​துள்​ளனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.