Shubman Gill Injury Update: டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு வருகை தந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (நவம்பர் 14) தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. முதலில் தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்த நிலையில், 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 31, வியான் முல்டர் மற்றும் டோனி டி சோர்ஸி ஆகியோர் தலா 24 ரன்களையும் அடித்தனர்.
Add Zee News as a Preferred Source
Shubman Gill Injury: கில்லுக்கு கழுத்தில் சுளுக்கு
இதையடுத்து பேட்டிங் செய்ய வந்தது இந்திய அணி. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 12 ரன்களிலும் அதையடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களத்திற்கு வந்த சுப்மன் கில் 3 பந்துகள் எதிர்கொண்ட நிலையில், கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக மைதானத்தில் வலியோடு சிரமப்பட்டார். அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய நினைத்தபோதிலும், அவரால் அது முடியவில்லை. மருத்துவக்குழு வந்து முதலுதவி அளித்தபோதிலும் அவரால் களத்தில் நிற்க முடியவில்லை. இதன் காரணமாக மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி ஓய்வறைடிலும் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
Shubman Gill Injury: அவசர பிரிவில் சுப்மன் கில்
முதல் இன்னிங்ஸின் இறுதியிலாவது பேட்டிங் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் தீவிரமடைந்ததால், அவர் களத்திற்கு வரவில்லை. வ்காயம் காரணமாக காயம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த பிசிசிஐ, கில்லுக்கு கழுத்து பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அவரை பிசிசிஐ மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று கூறி இருந்தது.
இந்த நிலையில், நேற்று (நவம்பர் 15) சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக சுப்மன் கில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டாவது போட்டி நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியிலும் சுப்மன் கில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
Shubman Gill Injury: சுப்மன் கில்லுக்கு பதில் யார்?
இந்த சூழலில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை என்றால், அவருக்கு பதில் யார் பிளேயிங் 11க்குள் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சுப்மன் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்சன் அல்லது தேவ்தட் படிக்கல்லை களமிறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேசமயம் சுப்மன் கில் காயத்தில் இருந்து மீண்டு இரண்டாவது போட்டிக்கு திரும்பவும் வாய்ப்புள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தட் படிக்கல், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, அகசர் படேல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் & துணை கேப்டன்), துருவ் ஜுரேல், கே.எல். ராகுல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப்.
About the Author
R Balaji