புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் 4 மருத்துவர்களின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது ஆகியோருக்கு ஐஎம்ஆர், தேசிய மருத்துவப் பதிவாளர் (என்எம்ஆர்) ஆகியோர் வழங்கிய அங்கீகாரத்தை எம்எம்சி உடனடியாக ரத்து செய்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.இந்த மருத்துவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மருத்துவராகப் பணியாற்ற முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.