பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தோல்வி ஏன்?

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் மொத்​த​முள்ள 243 தொகு​தி​களில் ஆளும் என்​டிஏ கூட்​டணி 202 இடங்​களை பெற்​றுள்​ளது. அதேசம​யம் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​டணி 35 ஆக சுருங்கி விட்​டது. ஆர்ஜேடி 25 இடங்களை மட்டுமே பெற்றது.

இதில் முக்​கிய ஆதர​வாளர்​களான யாதவ் மற்​றும் முஸ்​லிம்​கள் எதிர்க்கட்​சிகளுக்கு வாக்​களிக்​காதது ஏன் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​தின் முக்​கிய நடவடிக்​கை​யான எஸ்​ஐஆர் (வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்) முதல் மாநில​மாக பிஹாரில் அமலானது.

இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பிஹாரில் வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடத்​தி​னார். இதன் உச்​ச​மாக மெகா கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ராக ஆர்​ஜேடி தலை​வர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்​கப்​பட்​டார். இவை எது​வுமே மெகா கூட்​ட​ணிக்கு பலன் அளிக்​கவில்லை.

இதன் பின்​னணி​யில் சில முக்​கிய காரணங்​கள் கூறப்​படு​கின்​றன. இதில் ஒன்​றாக மெகா கூட்​ட​ணி​யில் தொடக்​கம் முதலாகவே நம்​பிக்​கை​யின்மை நில​வியது. தனது தந்தை லாலு​வுக்கு பிறகு மெகா கூட்​ட​ணிக்கு தேஜஸ்வி தலைமை தாங்க விரும்​பி​னார். இவருக்கு பின் இருக்​கை​யில் அமர காங்​கிரஸ் விரும்​ப​வில்​லை. யாத்​திரை​யில் கலந்​து​கொண்ட அனைத்து கட்​சிகளும் தேஜஸ்​வியை முதல்​வர் வேட்​பாள​ராக ஏற்​றுக்​கொண்ட போதி​லும் ராகுல் மட்​டும் மவுனம் காத்​தார்.

இதனிடையே இடது​சா​ரி​களும், விகாஸ் இன்​சான் கட்சி (விஐபி) தலை​வர் முகேஷ் சாஹ்னி​யும் வெளிப்​படை​யாக அதிக தொகு​தி​கள் கோரினர். இப்​பிரச்​சினையை பேசித் தீர்க்க பெரிய எதிர்​பார்ப்​புடன் டெல்லி சென்ற தேஜஸ்விக்கு ஏமாற்​றமே மிஞ்​சி​யது. இவரை சந்​திப்​பதை ராகுல் தவிர்த்து விட்​ட​தாக தகவல் வெளி​யானது. இறு​தி​யில் வேறு​வழி​யின்றி கட்​டா​யத்​தின் பேரில் முதல்​வர் வேட்​பாள​ராக தேஜஸ்வி அறிவிக்​கப்​பட்​டார். இது​வும் மெகா கூட்​ட​ணி​யின் ஒரு முக்​கியப் பின்​னடை​வாக பார்க்​கப்​படு​கிறது.

அதே​போல் விஐபி கட்​சித் தலை​வர் முகேஷ் சாஹ்னியை துணை முதல்​வர் வேட்​பாள​ராக அறி​வித்​ததும் பெரிய தவறாகக் கருதப்​படு​கிறது. ஏனெனில், இந்த அறி​விப்பு ஆளும் என்​டிஏ​வால் ஏற்​கெனவே தீவிர​மாக முன்​னிறுத்​தப்​பட்டு வந்த மகா தலித் சமூகத்தை அந்​நியப்​படுத்​தி​யது. மேலும், மெகா கூட்​டணி ஆட்சி அமைந்​தால் மற்​றொரு துணை முதல்​வர் உண்டு என்​றவர்​கள் அவரது பெயரை அறிவிக்​க​வில்​லை. இது பிஹாரில் சுமார் 20 சதவீதம் உள்ள முஸ்​லிம்​களை கோபப்​படுத்​தி​யது. இது​வும் முஸ்​லிம் பகு​தி​யில் மெகா கூட்​ட​ணி​யின் பலவீன​மான பிரச்​சா​ர​மும் இழப்பை ஏற்​படுத்தி விட்​டது. வழக்கமாக முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்கும் ஒவைசி இந்த முறை மெகா கூட்​ட​ணி​யில் இணைய விரும்​பினார். ஆனால், மெகா கூட்​டணி அவரை புறக்​கணித்​தது. இதன் விளை​வும் தேர்​தல் முடிவு​களில் வெளிப்​படை​யாகத் தெரி​கிறது.பாஜக போட்​டி​யிட்ட 101 தொகு​தி​களில் 12-ல் தோல்வி அடைந்​தது. இந்த 12-ல் 5 தொகு​தி​களை ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யிடம் பாஜக இழந்​துள்​ளது.

பிஹாரின் முக்​கி​யத் எதிர்​கட்​சித் தலை​வ​ரான தேஜஸ்​வி​யுடன் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ரான ராகுல் காந்தி மேடை ஏறி​னாலும் அது ஏனோ பெரி​தாகச் சிறக்​க​வில்​லை. ககரியா பிரச்​சா​ரத்​தின்​போது ராகுல், அத்​தொகுதி மீனவர்​களு​டன் தண்​ணீரில் குதித்து மீன் பிடித்​ததற்​கும் உரிய வாக்​கு​கள் கிடைக்​காதது போலானது. கடந்த 2004 முதல் 20 ஆண்​டு​களாக ராகுல் அரசி​யலில் உள்​ளார். அவரது இந்த அனுபவத்​திற்கு 55 வயதில் இது​போன்ற சிறு​பிள்​ளைத்​தன​மான சாகசங்​கள் தேவை​யில்லை என இப்​போது விமர்​சிக்​கப்​படு​கிறது.

தேர்​தல் வியூக நிபுணர் பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்​சி​யாலும் ராகுலுக்கு அதி​க​மான இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. பிரி​யங்கா காந்தியின் ​ பிரச்சாரமும் எடுபடவில்லை. 20 வருடங்​களாக தொடரும் என்​டிஏ ஆட்​சிக்கு எதி​ரான வாக்​கு​கள் தமக்கு நிச்​ச​யம் வெற்​றித் தரும் என்ற மெகா கூட்​ட​ணி​யின் கணிப்பு தவறாகப் போனது. இப்​போது பிஹாரின் வெற்​றி​யால் தமிழ்​நாடு மற்​றும் கேரளா​வுக்​கும் பாஜக சவால் விடு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.