India vs south Africa Test Match: தென்னாப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு நம் நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி கடந்த 14ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர் 16) முடிவடைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Add Zee News as a Preferred Source
IND vs SA: 30 ரன்கள் முன்னிலை வகித்தும் தோல்வி
இப்போட்டியில் முதலில் தென்னாப்பிரிக்கா அணி தான் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 189 ரன்கள் எடுத்து 30 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த சூழலில், இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்கள் எடுத்தது. டெம்பா பவுமா அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
IND vs SA: பிட்ச்தான் காரணம்
இதனைத் தொடர்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக 93 ரன்களில் ஆல் அவுட் ஆகி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதோடு தொடரையும் இழந்தது. தோல்விக்கு பிட்ச்சே காரணம் என ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் கூறியிருந்தனர். மறுபக்கம் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் வீரர்களையும் தேர்வுக்குழுவையும் விமர்சித்து வருகின்றனர்.
IND vs SA: கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்
இந்த நிலையில், தான் பந்து வீசினால் கூட விக்கெட் விழும் அளவிற்கு பிட்ச் மிகவும் மோசமாக இருக்கிறது என முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கொல்கத்தாவின் அந்த பிட்ச் மிகவும் மோசமானது. ஆனால் அதில் பேய் ஏதுமில்லை என போட்டியின் முடிவில் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் கூறுகிறார். உண்மையில் அது ஒரு மோசமான பிட்ச்தான். ஏனென்றால் ஒரு டெஸ்ட் போட்டியானது இரண்டரை நாட்களில் முடிகிறது என்றால் அந்த பிட்ச்சில் ஏதோ தவறு இருக்கிறது.
IND vs SA: சுந்தருக்கு பவுலிங் கொடுக்காதது ஏன்?
ஸ்பின்னர்களுக்கு சதுர வடிவில் பந்துகள் திரும்புகின்றன. இது போன்ற பிட்ச்சில் நான் பந்து வீசினால் கூட விக்கெட்களை வீழ்த்துவேன். ஒரு அணியில் 4 ஸ்பின்னர்களுக்கான தேவை என்ன இருக்கிறது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. வாஷ்ங்கிடன் சுந்தரை 3வது இடத்தில் களமிறக்கி பேட்டிங் ஆட வைப்பதில் கூட எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் அவருக்கு பவுலிங் கொடுக்காதது மோசமான ஒரு முடிவு. இவ்வாறு கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.
About the Author
R Balaji