ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னை: சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தமிழக ஐஎன்​டி​யுசி தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. இதில்தலை​வ​ராக மு.பன்​னீர்​செல்​வம், செய​லா​ள​ராக கோவை செல்​வம் வெற்றி பெற்​றனர்.

இந்​திய தேசிய தொழிற்​சங்க காங்​கிரஸ்​ஸின் தமிழக ஐஎன்​டி​யுசி மாநில நிர்​வாகி​கள் தேர்​தலை, ஐஎன்​டி​யுசி சட்ட விதி​கள்​படி நடத்​தும்​படி, சென்னை உயர்நீதி​மன்ற நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யன் மற்​றும் முகமத் ஷஃபி ஆகியோர் கொண்ட அமர்வு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, தமிழக ஐஎன்​டி​யுசி அவசர செயற்​குழு கூட்​டம், கடந்த அக்​.31-ம் தேதி நடந்​தது.

இதில், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் வரும் 16-ம் தேதி தேர்​தல்நடை​பெறும் என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் உள்​ளிட்ட நடை​முறை​கள் முடிந்​து, இறுதி வேட்​பாளர் பட்​டியலும் வெளி​யிடப்​பட்​டது. இந்​நிலை​யில் மற்​றோரு பிரி​வினர் மதுரை​யில் நவ.15-ம் தேதி தேர்​தல் நடத்​தப்​படும் என அறி​வித்​தனர். இந்த போட்டி தேர்​தலுக்கு தடை விதிக்​கக்​கோரி திரு​வள்​ளூர் மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டு, நீதி​மன்​றம் போட்​டித் தேர்​தலுக்கு தடை விதித்​தது. மேலும் 16-ம் தேதி செங்​கல்​பட்​டில் நடக்​கும் தேர்​தலுக்கு அனு​மதி அளித்து உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் தமிழக ஐஎன்​டி​யுசி​யின் தலை​வர் உள்பட அனைத்து நிர்​வாகி​களின் தேர்​தல் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி திருப்​போரூர் வடக்கு மாட​வீ​தி​யிலுள்ள எல்​லாம்​மாள் திருமண மண்​டபத்​தில் நேற்று நடை​பெற்​றது. தமிழ்​நாடு காங்​கிரஸ் கட்சி செயல் தலை​வர் எம்​.கே.​விஷ்ணு பிர​சாத் எம்​.பி, ஓய்​வு​பெற்ற வரு​வாய்த் துறை அலு​வலர் சோமசுந்​தரம் ஆகியோர் மேற்​பார்​வை​யில், ஐஎன்​டி​யுசி​யின் மூத்த உறுப்​பினர்​கள் ஏ.கல்​யாண்​ராமன், எஸ்​.லிங்க மூர்த்தி, எம்​.ஆறு​முகம், எம்.நந்​தகு​மார் ஆகியோர் தேர்​தல் அதி​காரி​களாக இருந்து தேர்​தலை நடத்​தினர்.

இதில் வாக்​களிக்க தகு​தி​யான 1,810 பேரில் 1,740 பேர் வாக்​களித்​தனர். பின்​னர் வாக்​கு​கள் எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. இதன்​படி தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்ட மு.பன்​னீர் செல்​வம் 1,394 வாக்​கு​களும், செகரட்ரி ஜெனரல் பதவிக்கு கோவை செல்​வம் 1,135 வாக்​கு​களும், பொரு
ளாளர் வாழப்​பாடி ராம கர்​ணன் 958-​வாக்​கு​களும், பொதுச் செய​லா​ளர்​களாக வெங்​கடேஷ்-296, லலிதா சுந்​தரம​காலிங்​கம் 268, கருப்​பை​யா-230, வழக்​கறிஞர் சரவணன் 224, ராஜேஸ்​வரி 201 வாக்​கு​களும் பெற்று வெற்றி பெற்​றனர். செயற்​குழு உறுப்​பினர் 30 பேர் போட்​டி​யின்றி தேர்வு பெற்​றனர். வெற்றி பெற்​றவர்​களுக்கு விஷ்ணுபிர​சாத்​ சான்​றிதழ்​ வழங்​கி பா​ராட்​டி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.