மாஸ் சலுகை! Vi ₹3799-ல் அமேசான் ப்ரைம் லைட் இலவசம்? ஆண்டு முழுதும் டேட்டா மழை

Vi Rs 3799 Annual Plan Review : இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vi (வோடபோன் ஐடியா), அதன் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வகையான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. உங்கள் தேவைக்கேற்ப டேட்டா, அழைப்புகள் மற்றும் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அப்படி நீங்கள் ஒரு வருடன் முழுக்க ரீசார்ஜ் தொல்லையில் இருந்து விடுப்பட விரும்பினால் Vi-யின் ₹3799 வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை செய்யலாம்.  

Add Zee News as a Preferred Source

Vi-யின் ₹3799 வருடாந்திர ரீசார்ஜ் திட்டம்
அம்சம்
விவரம்
செல்லுபடியாகும் காலம் (Validity)
365 நாட்கள் (ஒரு வருடம்)
மொத்த டேட்டா (Total Data)
200 GB (மொத்த வருடத்திற்கும்)
அழைப்புகள் (Voice Calls)
அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் (Unlimited Calls)
எஸ்.எம்.எஸ் (SMS)
ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்
கூடுதல் சிறப்பு நன்மைகள்:

இந்த வருடாந்திர திட்டத்துடன் கீழ்க்கண்ட Vi-யின் சிறப்பு நன்மைகளும் இலவசமாக வருகின்றன

1. Vi Movies & TV VIP அணுகல்:
Vi ஆப் மூலம் திரைப்படங்கள், அசல் நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி டிவி சேனல்களை நீங்கள் இலவசமாகப் பார்க்கலாம்.

2. Weekend Data Rollover (வார இறுதி டேட்டா ரோல்ஓவர்):
திங்கள் முதல் வெள்ளி வரை நீங்கள் பயன்படுத்தாத தினசரி டேட்டாவை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம். (இந்த ₹3799 திட்டத்தில் மொத்தமாக 200GB டேட்டா இருப்பதால், இதில் இந்த ரோல்ஓவர் விதி பொருந்தாது. இது தினசரி டேட்டா திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.)

3. Binge All Night:
நள்ளிரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை நீங்கள் பயன்படுத்தும் டேட்டாவிற்கு உங்கள் 200 GB பேலன்ஸில் இருந்து எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது. இது முற்றிலும் இலவசம் (Unlimited Data) ஆகும்.

4. Data Delights:
அவசர காலங்களில், மாதத்திற்கு இரண்டு முறை, 1GB கூடுதல் டேட்டாவை நீங்கள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில், தினசரி டேட்டா ஒதுக்கீடு இல்லை. மொத்தமாக 200 GB டேட்டா மட்டுமே ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. உங்கள் டேட்டா தேவை குறைவாக இருப்பின், ஒரு வருடத்திற்கு இந்தத் திட்டம் மிகவும் சிக்கனமான தேர்வாக இருக்கும்.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.