Friends : `அஜித், சினிமால இருக்கற யாரையும் லவ் பண்ணிடாத, புரியுதா?’ – ரமேஷ் கண்ணா செய்த கலாட்டா!

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ். இந்தப்படம் வருகின்ற நவம்பர் 21ம் தேதி, 4K தரத்தில் மீண்டும் வெளியாகிறது.

இந்த படத்துக்கான புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவ. 17) நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரமேஷ் கண்ணா தனது நாஸ்டாலஜி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் சித்திக் குறித்து பேசிய ரமேஷ் கண்ணா, “சித்திக் சார பொறுத்தவரை ஒரு டயலாக் கூட வெளி டயலாக் எழுத விட மாட்டார். எல்லாமும் ஸ்கிரிப்ட்ல இருக்கும். நான் அவரோட பாஸ்கர் ராஸ்கல்ல டயலாக் ரைட்டரா வேலை செய்தவன். `ஆணியே புடுங்க வேண்டாம்’ டயலாக் சித்திக் சார், கோகுல் கிருஷ்ணா எழுதின டயலாக் தான். வடிவேல் சொன்னது கிடையாது. வடிவேல் சொன்னதா தவறான தகவல் பரவியிருக்கு.

ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா

படத்துல ஒரே ஒரு டயலாக் நான் சொந்தமா போட்டேன். பிரமன்ராஜ் சார் கேப்பாரு ‘டேய் நேத்து பஸ் ஸ்டாண்ட்ல என்ன நடந்தது’ அப்படின்னு. நான் உடனே, ‘ஆடு நடந்தது மாடு நடந்தது’ அப்படின்னு சொன்ன உடனே கட் சொல்லிட்டாரு டைரக்டர். ‘என்ன இது டயலாக், அவர் என்ன கேக்குறார் நீங்க என்ன சொல்றீங்க’ அப்படின்னு கேக்க, ‘இல்ல சார் இது ஒரு மாதிரி கல்ட் ஜோக் சார்’ அப்படின்னு சொன்னேன். ‘அதெல்லாம் வேணாம்’னு சொல்லிட்டார். ‘இல்ல சார், வச்சுக்கலாம் சார், ப்ளீஸ்’னு கேக்கவும், ‘சரி சரி வச்சு தொலைங்க’ அப்படின்னு வச்சுட்டு போனாரு.

டி.ஆர் சார் மகன் சிம்பு சார் கூட ‘எனக்கு பிரண்ட்ஸ்ல ரொம்ப பிடித்த டைலாக், ஆடு நடந்தது மாடு நடந்ததும்’ அப்படின்னு சொல்லுவாரு.

இந்த படத்தில் ஒவ்வொரு விஷயமும் ரசித்து ரசித்து பண்ணாரு டைரக்டர். அவர் ஒரு கிரேட் ஹியூமரிஸ்ட். அப்படி ஒரு டைரக்டர் இழந்தது எங்களுக்கெல்லாம் மாபெரும் இழப்பு.” என்றார்.

சூர்யா – ஜோதிகாவுக்கு தூது சென்ற ரமேஷ் கண்ணா

தொடர்ந்து நடிகர் சூர்யாவின் காதல் பற்றி பேசத் தொடங்கியவர், “பிரண்ட்ஸ் நேரத்துல சூர்யாவும் நானும் ரொம்ப ஜோவியலா பழகிட்டு இருப்போம். அந்த நேரத்துல தெனாலி ஷூட்டிங்குக்கு இங்க இருந்து போகும்போது சூர்யா, “ஜோதிகாவ கேட்டதா சொல்லு”ன்னு சொல்வார். இது கேக்குறதுதான் என் வேலை. உடனே நான் அங்க போய் “மேடம் சூர்யா ஆஸ்கிங் அபௌட் யூ”னு எனக்கு தெரிஞ்ச பாதி இங்கிலீஷ்ல சொல்லி முடிச்சா, அவங்க ‘தேங்க்யூ’ அப்படின்னுவாங்க.

ப்ரண்ட்ஸ்
ப்ரண்ட்ஸ்

அங்கருந்து போகும்போது ‘என்ன பத்தி சொல்லுங்க’ன்னு ஜோதிகா சொல்லுவாங்க. நான் கீழவந்து, “எப்பா தங்கச்சி உன்ன கேட்டதுப்பா” அப்படி சொன்னா ரெண்டு பேருக்கும் பயங்கர சந்தோஷமா இருக்கும். ரெண்டு பேருக்கும் தூதுக்கு போயிட்டு வந்து என் வேலை ஆரம்பிச்சேன். அதைவிட பெருசா ஒன்னும் சாதிக்கிறதுக்கு இல்லை. அப்படி காதலை வளர்த்த ஒரு படம் ப்ரண்ட்ஸ்.” என்றார்.

அஜித்துக்கு அட்வைஸ் செய்து வாங்கிக்கட்டிய ரமேஷ் கண்ணா

மேலும் தொடர்ந்தவர், “அதுமட்டும் இல்ல அமர்களத்துல அப்படித்தான் ஷாலினியும் அஜித்தும் லவ் பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு தெரியாது. நான் உட்கார்ந்து அட்வைஸ் பண்ணிட்டு இருக்கறேன் அஜித்துக்கு, “அஜித் சினிமால இருக்கற யாரையும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிடாத. ஃபேமிலி கேளா லவ் பண்ணி கல்யாணம் பண்ணு புரியுதா. ஏன்னா சினிமா அப்படி இப்படி…”ன்னு. அதை டைரக்டர் சரண் சார் பாக்குறாரு மானிட்டர்ல. “வாங்க” அப்படின்னு கூப்பிட்டாரு. “என்ன பண்றீங்க?” என்றார்.

“இல்லப்பா அஜித்துக்கு நான் சில அட்வைஸ் எல்லாம் கொடுக்கேன்”

“என்ன அட்வைஸ்”

“இல்ல இந்த மாதிரி சினிமால இருக்கறவங்க யாரையும் லவ் பண்ண வேணாம். அப்படினு”

“அடப் பாவி, அவரும் ஷாலினியும் லவ் பண்றாங்க. அடுத்த மாசம் கல்யாணம். உனக்கு படம் வேணுமா வேணாமா? இத்தோட போயிடு” அப்படின்னு மிரட்டுனார். அத்தோட வாய மூடினேன் நான். பேசவே இல்ல அதுக்கு அப்புறம்” என்றார் கலகலப்பாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.