
புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அசாமிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பான உத்தரவை, அசாம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி 18-ம் தேதி (இன்று) முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்க உள்ளது.