பிஹாரில் குடும்பம், ஆர்ஜேடி கட்சியில் இருந்து லாலு மகள் வெளியேறியதற்கு காரணமான ரமேஸ், சஞ்சய்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு​ மகள் ரோஹிணி ஆச்​சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார். இதற்கு சகோ​தரன் தேஜஸ்​வி​யின் நெருங்​கிய நண்​பர்​கள் ரமீஸ் நிமத் மற்​றும் சஞ்​சய் யாதவ்​தான் காரணம் என்​றும் குற்​றம்சாட்டி உள்​ளார். ஆர்​ஜேடி.​யில் அந்​தளவுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ரமீஸ், சஞ்​சய் ஆகியோர் யார்?

கடந்த 2 ஆண்​டு​களாக தேஜஸ்​வி​யின் அரசி​யல் குழு​வில் ரமீஸ் நிமத், சஞ்​சய் யாதவ் ஆகியோர் முக்​கிய​மானவர்​களாக உள்​ளனர். உ.பி. பல்​ராம்​பூரைச் சேர்ந்​தவர் ரமீஸ். இவரது தந்தை நியாமத்​துல்லா கான். பல்​ராம்​பூர் தொகுதி சமாஜ்​வாதி முன்​னாள் எம்​.பி. ரிஸ்​வான் ஜாகீரின் மரு​மகன் ரமீஸ். ரிஸ்​வான் மூலம் அரசி​யல் அனுபவம் பெற்ற ரமீஸுக்கு தேஜஸ்வி நட்பு கிடைத்​தது. தேஜஸ்வி விளை​யாடி வந்த கிரிக்​கெட் கிளப்​பில் ரமீஸும் இருந்​தார். அதனால் இரு​வருக்​குள் நட்பு உரு​வானது. அதன்​பின் அரசி​யல் களத்தை ஏற்​படுத்தி கொண்​டார் ரமீஸ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.