சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அமரன்’.
கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது.

இந்நிலையில் கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் கமல்,” ‘அமரன்’ படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி இருக்கிறது.
மத்திய அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் திரையிட தேர்வாகி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
நாட்டிற்காக இந்தப் படத்தை எடுத்தோம். சினிமா, நாடு என்று வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு இது ஒரு உதாரணம்.
தொடர்ந்து நாட்டிற்காக படம் எடுப்பேன். அடுத்து முப்படைகள் குறித்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து ‘மருதநாயம்’ படம் குறித்த கேள்விக்கு, “தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் அதுவும் சாத்தியம் என்பது என் நம்பிக்கை” என்று கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார்.