டாக்கா,
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Related Tags :