Is Gautam Gambhir resigning Head Coach Position: தென்னாப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் இரு அணிகளுக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்தது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது கவுகாத்தியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் எடுத்தது.
Add Zee News as a Preferred Source
மீண்டும் ஒரு தோல்வி
இந்த சூழலில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி தடுமாறி வருகிறது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மட்டுமே அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்து கடுமையாக சொதப்பி உள்ளனர். இது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடர் தடுமாற்றத்தை காட்டுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா இப்போட்டியிலாவது வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போட்டியிலும் இந்திய அணி சொதப்பி வருவதும் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கெளதம் கம்பீரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கெளதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறி வருகின்றனர்.
கம்பீர் பதவி விலக வேண்டும்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கையமானவை. இந்த சூழலில், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை தழுவி வருவது பெரும் பின்னடைவாக பர்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையை அடிக்கடி பயிற்சியாளர் கம்பீர் மாற்றி வருவது ரசிகர்களின் இடையே விமர்சனத்தை பெற்றிருக்கிறது. பேட்டிங் ஆர்டரை மாற்றுவது வீரர்களுக்கு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சர்பராஸ்கான் போன்ற வீரர்கள் இருக்கையில், அவர்களை அணியில் சேர்க்காததே இப்படியான பின்னடைவுக்கு காரணம் என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் இந்த கடும் சரிவுக்கு காரணமாக இருக்கும் கவுதம் கம்பீர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூறி தங்களை அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.
கம்பீருக்கு கீழ் இந்திய அணியின் சொதப்பல்
கெளதம் கம்பீர் பயிற்சியில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக என தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்து வருகிறது இந்திய அணி. வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிராக மட்டுமே இந்திய அணி தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji