அதிகாரப்பூர்வமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா எஸ்யூவி வெளியிட்ட நிகழ்வில் ஆல் வீல் டிரைவ் பெற்ற மாடல் விற்பனைக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆனால் எப்பொழுது வெளியிடப்படும் என்ஜின் விபரம் ஆகியவற்றை தற்பொழுது உறுதிப்படுத்தவில்லை.
புதிய சியரா வடிவமைக்கப்பட்டுள்ள டாடாவின் All-Terrain Ready, Omni-Energy and Geometry Scalable (ARGOS) architecture மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் FWD மட்டுமல்லாமல், AWD அல்லது 4WD ஆப்ஷனிலும் வடிவமைக்கவும், கூடுதலாக ICE, EV, தவிர சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் ஆகியவற்றிலும் வடிவமைக்க இயலும் வகையிலான பிளாட்ஃபாரம் ஆக உருவாக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வந்துள்ள இந்த சியராவில் 1.5 லிட்டர் டர்போ டீசல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என மூன்று விதமான ஆப்ஷனை கொண்டிருக்கின்றது. இதில் அனேகமாக டீசல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரண்டிலும் ஆல் வீல் டிரைவ் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நடுத்தர எஸ்யூவி சந்தையில் விக்டோரிஸ், பிரசத்தி பெற்ற க்ரெட்டா, எலிவேட், கிராண்ட் விட்டாரா உட்பட பலவற்றை சியரா எதிர்கொள்ளுகின்றது.