விராட் கோலியின் உணவகத்தில் ஒரு பிரியாணியின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாது, தொழில் உலகிலும் ஒரு வெற்றிகரமான ஆட்டக்காரராக வலம் வருகிறார். கிரிக்கெட் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் இவர், One8 Commune என்ற பெயரில் மும்பையில் பிரம்மாண்டமான உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தின் விலைப்பட்டியல் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது. Add Zee News as a Preferred Source … Read more

பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பணியாற்றிய போது, பல்வேறு வழக்குகளில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி கொடூரமாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, பல்வீர்சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய ஆய்வாளர் உட்பட 14 போலீஸார்மீது சிபிசிஐடி போலீஸார் நான்கு தனித்தனி வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த … Read more

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஹாரில் நடைபெற்ற குளறுபடிகளை சரி செய்யாமல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர். நடத்துவது வாக்குரிமையை பறிக்கும் செயல் என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, … Read more

ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர்

திருமலை: ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு எல்​விஎம்​3-எம்5 என்ற ராக்​கெட் மூலம் சிஎம்​எஸ்​-03 என்ற செயற்​கைக்​கோள் விண்​ணில் ஏவப்பட உள்​ளது. இந்​நிலை​யில் இதன் மாதிரி செயற்​கைக்​கோளு​டன் இஸ்ரோ தலை​வர் நாராயணன் மற்​றும் இஸ்ரோ விஞ்​ஞானிகள் சிலர் திரு​மலைக்கு வந்து நேற்று விஐபி பிரேக் நேரத்​தில் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தனர். அப்​போது மாதிரி செயற்​கைக்​கோளை ஏழு​மலை​யான் பாதத்​தில் வைத்து வழிபட்​டனர். கோயிலுக்கு வெளியே இஸ்ரோ தலை​வர் நாராயணன் பேசும்​போது, “சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள் தகவல் தொழில்​நுட்​பத்​தில் பல … Read more

மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஜாய் கிரிஸில்டா கொடுத்த பரிசு! துன்பத்திலும் இப்படியொரு முடிவா..

Joy Crizildaa Child : ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை பெருமை படுத்துவது போன்ற ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரைக்கு 3 நாள் சுற்றுலா… மலை ஏறலாம், அருவியில் குளிக்கலாம் – எவ்வளவு கட்டணம்?

TTDC 3 Days Chennai Madurai Tour: சென்னை – மதுரை மூன்று நாள் சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். 

Sanju Samson Trade: சிஎஸ்கே இல்லை? இன்னொரு முக்கிய அணிக்கு தாவும் சஞ்சு சாம்சன்?

ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது ட்ரேடிங் குறித்த செய்திகள் அனல் பறக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சஞ்சு சாம்சன் அணியை விட்டு வெளியேற போவதாக வெளியாகும் தகவல்கள் ஐபிஎல் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இவரை கைப்பற்ற ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த போட்டியில் முன்னிலை வகிக்கிறது. Add Zee News as … Read more

பீகாரில் ஜனசுராஜ் கட்சி தொண்டர் படுகொலை; ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் நள்ளிரவில் கைது

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், ஜனசுராஜ் கட்சியை சேர்ந்த பியூஷ் பிரியதர்ஷி என்பவர் மொகமா தல் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் கோரி பிரசாரத்தில் ஈடுபடும் … Read more

டி20 போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு; ரசிகர்கள் அதிர்ச்சி

வெல்லிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கேன் வில்லியம்சன் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை அடித்துள்ளார் . டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.கேன் வில்லியம்சனின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர் கூறியதாவது … Read more

BB Tamil 9 Day 27: வாட்டர் மெலனை பிழிந்தெடுத்த விசே; ரெண்டு எவிக்‌ஷனா?

மற்ற நாட்களில் போட்டியாளர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும். ஆனால் இந்த விசாரணை நாளில் விஜய்சேதுபதியின் குரல் மட்டுமே கேட்டது. அவர் கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.  ஏறத்தாழ அனைவருமே வாங்கிக் கட்டிக் கொள்ளும்போது விதிவிலக்கு ஆச்சரியமாக பாராட்டைப் பெற்றவர் வியன்னா மட்டுமே.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 27 “ஏன் போட்டியாளர்கள் இப்படி மோசமா நடந்துக்கறாங்க?” – இதுதான் பெரும்பான்மையான பார்வையாளர்களின் எரிச்சலுடன் கூடிய கேள்வி. இந்த நோக்கில்தான் நானும் கூட … Read more