Suriya: "நல்ல நண்பர்களாக இருங்க!" – ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு சூர்யா வாழ்த்து

ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

‘ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Suriya 46
Suriya 46

இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நந்தாவின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

வீடியோ காலில் பேசியிருக்கும் சூர்யா, “உங்க இரண்டு பேருக்கும் எங்களோட வாழ்த்துகள். சந்தோஷமா இருங்க. நல்ல நண்பர்களா இருங்க. உங்களோட வாழ்க்கை அழகான பிரமாதமான வாழ்க்கையாக இருக்கட்டும். சந்தோஷம் எப்போதும் உங்க வாழ்க்கையில நிரந்தரமாக இருக்கட்டும்” என வாழ்த்தியிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.