சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக சென்னை அருகே நிலைகொண்டுள்ளதால், சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேஙகி இருப்பதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 2வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ‘டிட்வா‘ புயல், […]