டெல்லி: நாடாளுமன்றத்தில் வாக்காளர் தீவிர சீர்திருத்தம் (SIR) குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் இன்று 2வது நாளாக முடங்கி உள்ளது. மதியம் 2மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று (டிசம்பர் 1) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 19 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்நேற்று எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை பாராளுமன்றம் […]