உடனே இவரை 5 ஏக்கர் நிலம் வாங்கச் சொல்லுங்க… ஏலத்தில் பணம் கொட்டும் – அஸ்வின்!

Ravichandran About IPL Mini Auction: அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 2026 ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. ஆனால் இதற்கு தற்போதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டன. ஏனென்றால் வரும் 15, 16ல் அத்தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருக்கிறது இது அனைவரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.சமீபத்தில் ஐபிஎல்லின் 10 அணிகளும் தங்கள் விடுத்த மற்றும் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

Add Zee News as a Preferred Source

Andre Russell & Glenn Maxwell அடுத்தடுத்த ஓய்வு  

அதில் பல்வேறு முக்கிய வீரர்கள் கழட்டிவிடப்பட்டிருந்தனர். அதன்பின் அவர்களுக்கு மினி ஏலத்தில் கடும் போட்டி நிலவி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கழட்டிவிடப்பட்ட வீரர்களில் ஆண்ட்ரே ரஸல், டு பிளெசிஸ் போன்ற வீரர்கள் தாங்கள் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். 

அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தான் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகக்கூடிய வீரர் யாராக இருப்பார் என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. இந்த நிலையில், 2026 ஐபிஎல்லை முன்னிட்டு நடக்கும் மினி ஏலத்தில் அதிக விலைக்கு எந்த வீரர் போக வாய்ப்புள்ளது என்பதை முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கி இருக்கிறார். 

Cameron Green: அதிக விலைக்கு போகும் கேமரூன் கிரீன் 

அவர் கூறியதாவது, கேமரூன் கிரீன் இப்போதே நான்கு அல்லது ஐந்து ஏக்கரில் நிலத்தை வாங்க சொல்லிவிடலாம். ஏனென்றால் வரும் மினி ஏலத்தில் ஆண்ட்ரே ரஸல், மேக்ஸ்வெல் போன்ற ஆல் ரவுண்டரகள் இல்லை. இதனால் கேமரூன் கிரீன் அதிக விலைக்கு ஏலம் போவார் என நான் நினைக்கிறேன். 

Chennai Super Kings: சென்னை அணி இந்த வீரர்களுக்கு போட்டி போடும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 6வது இடத்தில் கிளென் மேக்ஸ்வெல்லை கொண்டு வரலாம் என ரசிகர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் மேக்ஸ்வெல் 2026 ஐபிஎல் பங்கேற்கப்போவதில்லை என கூறிவிட்டார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி கேமரூன் கிரீன் அல்லது லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு செல்லும். மேலும், இவர்களுக்கு கடுமையான போட்டி நிலவும் என்பதால், அவர்களே அதிக விலைக்கு போவார்கள் என நினைக்கிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.