சோடா பாட்டில் மூடியில் 22, 23 விளிம்புகள் இல்லாமல் 21 விளிம்புகள் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா?

குளிர்பான பாட்டிலைத் திறக்கும்போது, அதன் மூடியில் இருக்கும் விளிம்புகளை கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு கண்ணாடி பாட்டில் மூடியிலும் சரியாக 21 விளிம்புகள் மட்டுமே இருக்குமாம். சில காரணங்களுடன் தான் இவ்வாறு 21 விளிம்புகள் மட்டும் கொண்டு குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

முதலில் 24 விளிம்புகள் இருந்தது

1892ஆம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் வில்லியம் பெயிண்டர் என்பவர் குரூன் கார்க் காப் என்ற இந்த மூடி வகையை உருவாக்கியிருக்கிறார்.

அப்போது அதில் 24 விளிம்புகள் இருந்துள்ளன. பழைய கார்க் மூடிகளை விட இந்த மூடி நன்றாக மூடியிருக்கிறது. ஆனால் பிரச்னையும் இருந்துள்ளது. தானியங்கி இயந்திரங்களில் பாட்டில்களை மூடும் போது, இந்த 24 விளிம்புகள் மிகவும் இறுக்கமாக இருந்ததால் பாட்டில்கள் உடைந்து போயிருக்கின்றன. இயந்திரங்களும் அடிக்கடி ஜாம் ஆகியிருக்கின்றன.

பின்னர் பொறியாளர்கள் 23 மற்றும் 22 விளிம்புகளுடன் சோதனை செய்தனர். ஆனால் இவை சரியாக வேலை செய்யவில்லை. நிறைய சோதனைகளுக்குப் பிறகு 21 விளிம்புகள் தான் இதற்கு சரியான தீர்வு என கண்டுபிடித்துள்ளனர்.

21 விளிம்புகள் ஏன்?

சோடா மற்றும் பீர் போன்ற பானங்களில் கார்பன் டை ஆக்சைடு வாயு அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அழுத்தத்தை உள்ளேயே வைத்திருக்க முழுவதும் காற்று புகாத மூடி தேவை. 21 விளிம்புகள் பாட்டிலின் கழுத்துப் பகுதியை சரியாக பிடித்து, அழுத்தத்தை சமமாக பகிர்ந்து கொள்ளுமாம்.

அதிக விளிம்புகள் இருந்தால் மூடி மிகவும் இறுக்கமாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் திறக்கும் போது பாட்டில் உடையலாம். குறைவான விளிம்புகள் இருந்தால் நன்றாக மூடாது, கசிவு ஏற்படும். இப்படி பல பிரச்னைகளுக்கு 21 விளிம்புகள் என்பது சரியான சமநிலையாக இருந்துள்ளது.

1900களின் ஆரம்பத்தில் பாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகள் இந்த 21 விளிம்புகள் கொண்ட மூடியை விரும்பின. இன்று உலகம் முழுவதும் பீர் அல்லது சோடா பாட்டில் போன்றவற்றில் இதே 21 விளிம்புகள் கொண்ட மூடியைத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.