நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் T.சிவாவின், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
T.சிவா `பூந்தோட்டக் காவல்காரன்’, `அரவான்’, `சரோஜா’, `கடவுள் இருக்கான் குமாரு’ போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவர் திரைப்பட விநியோகஸ்தரும் கூட.

T.சிவாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட தமிழ்நாடு திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
T.சிவா GOAT திரைப்படத்தில் இந்திய தூதரக அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.