சென்னை: திமுகவினர் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள் என புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் விஜய் கூறினார். மேலும், புதுச்சேரி அரசாங்கம் திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது, பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்கிறது என்றவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது என்றும் கடுமையாக சாடினார். புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. ‘ஏற்கனவே ரோடு ஷோ […]