இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மகிஹா ஷர்மா (Mahieka Sharma) குறித்து பத்திரிகையாளர்கள் எடுத்த கண்ணியமற்ற புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டு கொதித்தெழுந்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு உணவகத்திற்கு ஹர்திக் பாண்டியாவின் காதலியான மகிஹா ஷர்மா சென்றிருந்தார். அங்கிருந்து வெளியே வரும்போது, அவர் படிக்கட்டுகளில் இறங்கி வந்துள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த சில போட்டோகிராபர்கள், அவர் நடந்து வருவதைக் கீழ் கோணத்தில் இருந்து மிகவும் ஆபாசமாக தெரியும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இது ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைக்கும் செயல் என்று ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டியுள்ளார்.
Add Zee News as a Preferred Source
Hardik Pandya instagram story for his girlfriend Mahieka Sharma privacy. pic.twitter.com/9DqGYD9kYr
— Niro(@Niroy45) December 9, 2025
ஹர்திக் பாண்டியாவின் ஆவேச பதிவு
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள ஹர்திக், “நாங்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் மக்கள் எங்களை கவனிப்பார்கள், போட்டோ எடுப்பார்கள் என்பதை நான் அறிவேன்; அதை ஏற்கிறேன். ஆனால் இன்று நடந்த சம்பவம் எல்லை மீறிய ஒன்று. மகிஹா படிக்கட்டுகளில் சாதாரணமாகத் தான் இறங்கி வந்தார். ஆனால், எந்த பெண்ணையும் புகைப்படம் எடுக்கக்கூடாத ஒரு மோசமான கோணத்தில் அவரை படம் பிடித்துள்ளனர். ஒரு தனிப்பட்ட தருணத்தை வைத்து கேவலமான முறையில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்,” என்று சாடியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இது யார் எடுத்தது, என்ன தலைப்பு கொடுத்தார்கள் என்பதல்ல பிரச்சனை; இது அடிப்படை மரியாதை சம்பந்தப்பட்டது. பெண்களுக்கு கண்ணியம் உள்ளது. அனைவரும் எல்லைகளை மதிக்க வேண்டும். பத்திரிகை நண்பர்களின் உழைப்பை நான் மதிக்கிறேன், எப்போதும் ஒத்துழைப்பு தருகிறேன். ஆனால் தயவு செய்து கொஞ்சம் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காதலை உறுதி செய்த ஹர்திக்
ஹர்திக் பாண்டியா மற்றும் மாடல் அழகியான மகிஹா ஷர்மா இருவரும் காதலிப்பதாக பல மாதங்களாக வதந்திகள் பரவி வந்தன. கடந்த அக்டோபர் 2025ல், தனது பிறந்தநாளுக்கு முன்னதாக மகிஹாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து ஹர்திக் இந்த காதலை உறுதி செய்தார். மகிஹா ஷர்மா ஒரு யோகா பயிற்றுவிப்பாளர் மற்றும் மாடல் ஆவார். ஏற்கனவே நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கை மணந்து விவாகரத்து பெற்ற ஹர்திக் பாண்டியா, தற்போது தனது கிரிக்கெட், மகன் அகஸ்தியா மற்றும் காதலி மகிஹா ஆகிய மூன்றும் தனது வாழ்க்கையின் முன்னுரிமைகள் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
About the Author
RK Spark