கம்பீருடன் சண்டை போட்ட சீனியர் வீரர்? தோல்விக்கு யார்தான் காரணம்? முழு பின்னணி!

தென்னாப்பிரிக்கா அணியுடன் தற்போது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றது. 215 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 164 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆனது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Add Zee News as a Preferred Source

Gautam Gambhir & Hardik Pandya: கம்பீர் – ஹர்திக் பாண்டியா வாக்குவாதம்?

இந்த தோல்விக்கு இந்திய அணியில் பலரது மோசமான செயல்பாடுதான் காரணம் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதாவது ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காரசார்மாக பேசிக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ஹர்திக் பாண்டியாதன் காரணமாக என்ற கேள்வி எழும்பி உள்ளது. அந்த வீடியோவில் கம்பீர் மற்றும் பாண்டியா ஆவேசமாக பேசுவது பதிவாகி இருக்கிறது. அவர்களது உடல் மொழிகள் அவ்வாறே உள்ளன. எனவே ஹர்திக் பாண்டியாவுடன் வாக்குவாதத்தில் கம்பீர் ஈடுபட்டுள்ளார் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.

Hardik Pandya: இரண்டாவது டி20ல் ஹர்திக் பாண்டியா

இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இரண்டாவது டி20 போட்டியில் மந்தமாக அடினார். அவர் 23 பந்துகள் எதிர்கொண்டு 20 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாததால் ஹர்திக் பாண்டியா மேல் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அவரது ஆட்டம் ஏமாற்றத்தை அளித்தது. அவர் அடித்த 20 ரன்களை குறைந்த பந்தில் அடித்திருந்தால் கூட ஒன்று தெரிந்திருக்காது. அவர் அந்த ரன்களை அடித்த 23 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதனால் ஹர்திக் பாண்டியாவிடம் வேகத்தை அதிகரிக்காமல் ஏன் மந்தமாக விளையாடினாய் என கம்பீர் அவரிடம் கேட்டிருக்கலாம் என ரசிகர்கள் உகித்து வருகின்றனர்.

Gautam Gambhir: கவுதம் கம்பீரின் தவறுகளே தோல்விக்கு காரணம்?

ஆனால் கோபத்தை ஹர்திக் பாண்டியாவிடம் காட்டும் அளவிற்கு இந்த தோல்விக்கு ஹதிக் மட்டும் காரணம் இல்லை என்றும் கம்பீரின் சில முடிவுகளும் இப்படியான தோல்விகளுக்கு காரணம் என்று விமர்சித்து வருகின்றனர். அதாவது, 3 சதம் அடித்த சஞ்சு சாம்சனை பெஞ்சில் அமர வைத்தது. துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக ஃபார்மில் இல்லாத சுப்மன் கில்லை பேட்டிங் செய்ய வைப்பது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா போன்ற தரமான பேட்டர்கள் இருக்கையில், அக்சர் படேலை மூன்றாவது இடத்தில் களமிறக்கியது ஏன் என முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 2026 டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்திய அணியில் யார் இருப்பார்கள் யார் இருக்க மாட்டார்கள் என்ற ஒரு நிலை தன்மையே இல்லை என்றும் கவலை தெரிவித்து வருகின்றனர். 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.