ஐபிஎல் 2026 ஏலம் (IPL 2026 Auction) நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வீரர்களை குறிவைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் (David Miller), சிஎஸ்கே அணிக்கு மிக சரியான தேர்வாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதற்கான மூன்று முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Add Zee News as a Preferred Source

மிடில் ஆர்டரில் பலம்
ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் அணியிலிருந்து விலகியதால், சிஎஸ்கேவின் லோயர் மிடில் ஆர்டரில் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. தோனி பெரும்பாலும் கடைசி சில ஓவர்களி ல்தான் பேட்டிங் செய்கிறார். எனவே, ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய மற்றும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்கக்கூடிய ஒரு ‘ஃபினிஷர்’ அணிக்கு தேவை. டேவிட் மில்லர் அந்த இடத்திற்கு மிகச்சரியாக பொருந்துவார். ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ் போன்ற வலது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்த அணியில், மில்லர் போன்ற ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது எதிரணி பந்துவீச்சாளர்களுக்குக் கடும் நெருக்கடியை கொடுக்கும்.
மாற்று வீரர்கள் இல்லை
இந்த முறை ஏலத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல், கிளென் மேக்ஸ்வெல் போன்ற முன்னணி ஆல்ரவுண்டர்கள் இல்லாதது சிஎஸ்கேவுக்கு பின்னடைவு. லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்கள் இருந்தாலும், அவரது ஐபிஎல் ரெக்கார்ட் அவ்வளவு சிறப்பாக இல்லை. வனிந்து ஹசரங்கா பேட்டிங்கில் கை கொடுப்பாரா என்பது சந்தேகம். இந்த சூழலில், அனுபவம் வாய்ந்த மற்றும் நிரூபிக்கப்பட்ட வீரரான டேவிட் மில்லரே சிறந்த தேர்வாகத் தெரிகிறார். இவரது அடிப்படை விலை ரூ.2 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே மேஜிக்
வயதான வீரர்கள் அல்லது ஃபார்மில் இல்லாத வீரர்களை எடுத்து, அவர்களை ‘மேட்ச் வின்னர்களாக’ மாற்றுவதில் சிஎஸ்கே கில்லாடி. ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, அஜிங்க்யா ரஹானே என பல உதாரணங்கள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சொதப்பிய மில்லர், குஜராத் டைட்டன்ஸ் அணியில் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மேலும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவம் இருப்பதால், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கின் வியூகங்கள் அவருக்குப் புதிதல்ல. எனவே, இந்த ஏலத்தில் சிஎஸ்கே மில்லரைத் தூக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை!
சென்னை தக்கவைத்து வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸில் இருந்து வர்த்தகம் செய்யப்பட்டவர்), டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ரவீந்திர ஜடேஜா (ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வர்த்தகம் செய்யப்பட்டார்), ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, சாம் கர்ரன் (ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வர்த்தகம் செய்யப்பட்டார்), தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், மதீஷா பத்திரனா, கமலேஷ் நாகர்கோடி, ராகுல் திரிபாதி, வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.
About the Author
RK Spark