இன்றுடன் ஓய்வு பெரும் ஜான் சீனா! அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘WWE ஜாம்பவான்’ ஜான் சீனா (John Cena), தனது 25 ஆண்டுகால மல்யுத்த சாம்ராஜ்யத்திற்கு விடைகொடுக்கத் தயாராகிவிட்டார். டிசம்பர் 14ம் தேதி இன்று வாஷிங்டன் டிசியில் நடைபெறும் ‘WWE சாட்டர்டே நைட் மெயின் ஈவென்ட்’ நிகழ்ச்சியில், தற்போதைய ஹெவிவெயிட் சாம்பியனான குந்தரை எதிர்த்து தனது இறுதி போட்டியில் களமிறங்குகிறார். ஒரு சகாப்தமே முடிவுக்கு வரும் இந்த தருணத்தில், ஜான் சீனாவின் சொத்து மதிப்பு மற்றும் அவர் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Add Zee News as a Preferred Source

The GOAT.

There will never be another John Cena!  pic.twitter.com/8dT8jUQjma

— WWE (@WWE) December 14, 2025

சொத்து மதிப்பு ரூ.680 கோடி

ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் மற்றும் தி ஸ்ட்ரீட் போன்ற முன்னணி ஊடகங்களின் அறிக்கையின்படி, ஜான் சீனாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் $80 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.680 கோடி) என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் சாதாரண பாடி பில்டராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜான் சீனா, இன்று ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், WWE-யின் முகமாகவும் உயர்ந்துள்ளார்.   அவரது வருமானத்தில் பெரும்பகுதி WWE ஒப்பந்தங்கள் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் மூலமே வருகிறது. ‘பீஸ்மேக்கர்’ (Peacemaker), ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ (Fast and Furious) போன்ற படங்கள் அவரது சொத்து மதிப்பை எகிற வைத்துள்ளன.

WWE சம்பளம்: ரூ.100 கோடி!

ஜான் சீனா பகுதிநேர வீரராக இருந்தாலும், அவருக்கு வழங்கப்படும் சம்பளம் மலைக்க வைக்கிறது. 2023-ல் $8.5 மில்லியனாக இருந்த அவரது WWE அடிப்படை சம்பளம், தற்போது $12 மில்லியனாக (சுமார் ரூ.100 கோடி) உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அவரது பெயர் மற்றும் புகைப்படத்துடன் விற்கப்படும் டீ-ஷர்ட், தொப்பி, ரிஸ்ட் பேண்ட் போன்ற பொருட்களின் விற்பனையில் அவருக்கு 5% ராயல்டி கிடைக்கிறது. WWE வரலாற்றில் அதிக மெர்ச்சண்டைஸ் விற்பனை செய்தவர் என்ற சாதனை இவரிடமே உள்ளது. ஒவ்வொரு முக்கிய போட்டியிலும் கலந்துகொள்வதற்காக மட்டும் அவருக்கு கூடுதலாக $500,000 (சுமார் ரூ.4 கோடி) வழங்கப்படுகிறது.

கடைசி போர்

ஜான் சீனாவின் கடைசி போட்டியாளரான குந்தர், ரிங்கில் ஒரு அசுரனை போல செயல்படக்கூடியவர். ஆனால், 17 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜான் சீனாவிடம் இருக்கும் அனுபவம் சாதாரணமானது அல்ல. குந்தரின் உடல் வலிமையை சமாளிக்க, ஜான் சீனா தனது வேகத்தையும், எதிராளியின் மனநிலையை படிக்கும் திறனையும் பயன்படுத்துவார். பல ஜாம்பவான்களை வீழ்த்திய அவரது ‘Attitude Adjustment’ மற்றும் ‘STF’ சப்மிஷன் உத்திகள், குந்தருக்கு பெரிய சவாலாக இருக்கும். தனது கடைசி போட்டியில் வென்று, தலையில் கிரீடத்துடன் விடைபெறுவாரா ஜான் சீனா? உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த கனவு போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.